எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மங்களூரு,பிப்26ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந் திரம்பறிபோய்விட்டதுஎன்று மங்களூருவில் நடந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

மங்களூரு நேரு விளை யாட்டு மைதானத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று (25.2.2017) நடந்தது. இந்த மாநாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.  பின்னர் அவர் பேசியதாவது:

கர்நாடகத்தில் கல்புர்கி, கோவிந்தபன்சாரே உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப் பட்டுள்ளனர். எழுத்தாளர் பகவான் கிரீஸ் கர்னாடுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எழுத்தாளர் கிரீஷ் உத்தங்கி என்பவரின் விரல்களைத் துண்டிப்போம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியுள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் அனந்தமூர்த்திக்கும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது. தனது சொந்த நாட்டில் சொந்த கருத்துகளை மக்கள் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்திய நாடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சொத்து இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு, மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்திவிட்டனர்.

காந்தியார் கொல்லப்பட்ட தினத்தை இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். இந்த அமைப்பின் மூத்த தலைவர்கள், சர்வாதிகாரி முசோலினியுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவரது சிந்தனைகளைத்தான் இந்தி யாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திணித்து வருகிறது. ஹிட்லர் அரசாட்சியின் தத்துவங்களை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றி வருகிறது. மொத்தத்தில் சிறுபான்மையின மக்களை துன்புறுத்தும் வேலை களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner