எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உசிலம்பட்டி,பிப்.26செக்கானூ ரணி அருகே உள்ளது கிண்ணி மங்கலம். இந்த ஊரிலுள்ள பட்டத்து அரசி அம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி சாமிபெட்டிஎடுக்கும்விழா நடைபெறுவதுவழக்கமாம். அப்போது மாவிலிபட்டியிலி ருந்து பூஜைப்பொருட்களுடன் சாமி பெட்டி எடுத்து வந்து கிண்ணிமங்கலத்தில் உள்ள பட்டத்து அரசி அம்மன் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து விட்டு, பின்னர் மீண்டும் பெட்டியை மாவிலிபட்டிக்கு கொண்டு செல்வது வழக்கமாம்.

இதேபோல இந்த ஆண் டும் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாவிலிபட்டியிலிருந்து சாமி பெட்டி எடுத்து வரப்பட்டது. அப்போது சாமி கும்பிடுவது தொடர்பாக,அங்கிருந்தஇரு தரப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் செக்கானூரணி காவல்நிலையத்தில் தனித் தனியாக புகார் செய்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்தகாவல்துறையினர்6 பேரை கைது செய்தனர். மேலும் கிண்ணிமங்கலத்தில் திருமங்கலம் வட்டாட்சியர் மலர்விழி இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

கோவிலுக்குப் பூட்டு

அதைத் தொடர்ந்து பட்டத்து அரசி அம்மன் கோவிலை வட்டாட்சியர் பூட்டு போட்டு பூட்டினார். மேலும் பூஜைப் பொருட்களுடன் வந்த சாமி பெட்டி வழக்கம்போல் மாவிலி பட்டிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner