எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆராய்ச்சி, சமூகநீதி, பாலியல் நீதிகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன

400-க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர்கள் கண்டனம்!

புதுடில்லி, பிப்.27 புகழ்பெற்ற டில்லி ஜவகர்லால் நேரு பல் கலையில் நடவடிக்கைகள், ஆராய்ச்சி, சமூகநீதி, பாலியல் நீதி முதலியவற்றிற்குப் பெரிதும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்று பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு அமெ ரிக்காவைச் சேர்ந்த 400- -க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். (ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏபிவிபிக்கு வெளியிலிருந்து பெரும் ஊக்கம் தரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது).

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துவரும் பல்வேறு சம்பவங்கள் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களின் கவலையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அளித்துள்ள திறந்த மடலில் தெரிவித்துள் ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பேராசிரியர்கள் ஒன்றிணைந்து, டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான நிகழ்வுகள் குறித்து ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின்  துணை வேந்தர் எம்.ஜெகதீஷ் குமாருக்கு கையொப்பமிட்டு, திறந்த மடலின் மூலமாக தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

துணைவேந்தருக்குத் திறந்த மடல்

திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளதாவது:

கல்வி கலாச்சாரம் மற்றும் அமைப்பு உள்ளிட்டவை கூட்டுறவின் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் உருவாக்கப்பட்டவையாக உள்ள நிலையில் ஜேஎன்யூ அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

உங்கள் வளாகத்தில் ந¤கழ்ந்து வருபவை யாவையும் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். மிகவும் கவலை கொள்கிறோம். பன்னாட்டளவில் கல்வியில் சிறந்ததென பெயர்பெற்ற, பல ஆண்டுகளாக அறிஞர் பெருமக்களை, கல்வியாளர்களை, பேராசிரியர்களை, இன்னும் பிற தொழில் வல்லுநர்களை அளித்துள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் பொறுப்புவாய்ந்த நிர்வாகிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கல்வி சுதந்திரம் மற்றும் பல்கலைக்கழக தன்னாட்சி உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் விவாதங்கள், கலந்து ரையாடல்கள், மாற்றுக்கருத்துகள் என்பவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

மோதல்கள்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாணவர்கள் தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து ஓராண்டாகவே ஜேஎன்யூவின் பிரச்சினைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன. அன்றிலிருந்து மாணவர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகம் மோதல் போக் கையே கொண்டுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்களை நடத்த அனுமதி மறுப்பது, தாக்கப்பட்ட மாணவர் காணாமற்போனது, பிரச்சினைகளில் குரல் கொடுக்கின்ற ஆசிரியர்களுக்கு ஊதியக் குறைப்பு, விளக்கம் கேட்டு தாக்கீது கொடுப்பது, அண்மைக்கால மோதலுக்கு காரணமான மாணவர் சேர்க்கைக் கொள்கைகளில் திருத்தம் செய்வது மற்றும் முனைவர் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக் குறைப்பது என பல்வேறு வகைகளிலும் மோதல்போக்கைக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

விளிம்புநிலை சமூகத்துக்கான வாய்ப்பு மறுப்பு

இதுபோன்ற தாக்குதல்கள் இந்தியாவில் வரலாற்று ரீதியில் விளிம்புநிலையில் உள்ள சமுதாயத்தின் வாய்ப்புகளை மறுப்பதாகவும், ஜேஎன்யூ போன்ற பல்கலைக்கழகங்களில், பொதுக்கல்விமீதான தாக்குதல்களாகவும் நாங்கள் உணர்கி றோம்.

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் எண்ணிக்கை குறைக்கப்படாமல்  ஏற்கெனவே உள்ள நிலை தொடர வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மாணவர் சேர்க்கைக் கொள்கை  அரசமைப்புக்கு உட்பட்டு உறுதிசெய்யப்படவேண்டும்.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துடனான  கூட் டுறவின்மூலமாக கல்வி, கலாச்சாரம், அமைப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மிகவும் மோச மான அச்சுறுத்தலுக்கு ஜேஎன்யூ உள்ளாகி உள்ளது.

பல்கலைக் கழகத்தின் தன்னாட்சியை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்களுடன், பன்னாட்டு சமூகத்துடன் ஜேஎன்யூ கொண்டுள்ள உறவைத் தொடரவேண்டும்.

பல்கலைக் கழகத்தில் சாதனையாளர்களை உருவாக்கிட கல்வியில் சுதந்திர நோக்குடன் கற்பிப்பது மற்றும் ஆராய்ச்சி, சமூகநீதி,பாலியல் நீதியை  மற்றும் மக்களின் சுதந்திர உரிமை களை பாதுகாக்கின்ற வகையில் செயலாற்றிட வேண்டும்

இவ்வாறு பன்னாட்டு பல்கலைக் கழகங்களின் பேராசிரி யர்கள் திறந்த மடலில் குறிப்பிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவரை சந்தித்து திக்விஜய்சிங் மனு

இதனிடையே காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங் 24.2.2017 அன்று ஜேஎன்யூ மாணவர்களுடன் இணைந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். ஜேஎன்யூ மாணவர் சேர்க்கைக் கொள்கையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களை விலக்கக்கோரி குடியரசுத் தலைவரை அவர்கள் சந்தித்தனர்.

பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), பிஎச்டி, மற் றும் எம்ஃபில் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில்  மாணவர்கள்மீது திணிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமான தாகவும், கல்விக்குழுவின் விதிமுறைகளை மீறுவதாகவும் மற்றும்கல்விக்கொள்கையில்முடிவெடுக்கின்றபிறஅமைப்பு களின் கருத்துகளுக்கு விரோதமானதாகவும் அந்த அறிவிப்பு கள் உள்ளது என்று திக் விஜய்சிங் மற்றும் ஜேஎன்யூ மாணவர்கள் குடியரசுத்தலைவரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner