எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மங்களூரு (கருநாடகா), பிப்.27 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸின் மிரட்டலுக்குச் சவால் விடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

நீங்கள் நடத்திய இந்தப் பேரணிக்கு வருமாறு சில மாதங்களுக்கு முன்பே தோழர் சிறீராமரெட்டி (சிபிஎம் கரு நாடக மாநிலச் செயலாளர்) என்னை அழைத்திருந்தார். வெகுநாள்களுக்குப் பிறகு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, ஆர்எஸ்எஸின் சகிப்புத் தன்மையின்மை பகிரங்கமாகவெளிப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் என்னை மங்கலாபுரம் மண்ணில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறித் திரிந்தார்கள். சிலர் கேரளத்திற்கு வெளியே என்னை எங்கும் கால்வைக்க விடமாட்டோம் என்றும் வீரவசனம் பேசித் திரிந்தார்கள்.

ஆர்எஸ்எஸ்சின் கொலைவாளுக்கு இடையில்தான் பயணித்தேன்

ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால், முதல்வரான பிறகு இயல்பாகவே முதல்வருக்கு பாது காப்பளிக்கும் காவல்துறையினர் மற்றும் காவல்துறையினரின் ஆயுதங்களின் நடுவே பயணிக்க வேண்டியது நமது ஆட்சி முறையின் ஒரு வழக்கமாகும்.

நான் திடீரென்று ஒரு நாள் வானத்தில் இருந்து குதித்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவனல்ல. ஆர்எஸ்எஸ்- அய் நேரில் அறியாத நபரல்ல நான். உங்களை நன்கு அறிந்துதான் செயல்பட்டு வந்திருக்கிறேன். இப்போது காவல் துறையினரின் ஆயுதங்களின் நடுவே நான் செல்வதாகக் கூறும் நீங்கள், உங்கள் பழைய ஆர்எஸ்எஸ்காரர்களைக் கேளுங்கள். பிரண்ணன் கல்லூரியில் படிப்பு முடித்து வெளியில் வந்தபோது ஆர்எஸ்எஸ்காரர்களின் உறையிலிருந்து உருவிய கத்தியின் நடுவேதான் பயணம் செய்தேன். அன்று உங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றால் இன்று என்ன செய்யப் போகிறீர்கள்?

மத்தியப்பிரதேசத்திற்கு நான் சென்ற போது அந்த அரசு என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென்று கூறியபோது,ஒருமுதல்வர்என்ற முறையில் பொறுப்புடன் கடைப்பிடித் தேன். முதல்வர் பினராயி விஜயன் என்று இல்லாமல், கம்யூனிஸ்ட் ஊழியர் பினராயி விஜயன் என்று நான் போயிருந்தால் நிச்சயம் நான் நிகழ்ச்சிக்குப்போயிருப்பேன். எனவே இந்த மிரட்டல்கள் எங்களிடம் வேண் டாம்.”

தோழர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர்

(கருநாடக மாநிலம், மங்களூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ‘‘மதநல்லிணக்க மற்றும் மக்கள் ஒற்றுமைப் பேரணி’’,- பொதுக்கூட்ட உரையில் இருந்து...)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner