எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இவ்வாண்டு முதல் ‘நீட்’ தேர்வாம்.

** திருச்செந்தூர் படகு விபத்தில் மரணித்த 9 பேர் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

** தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரும் தி.மு.க. தொடர்ந்த வழக்கின்மீது, தமிழக முதலமைச்சர், பேரவைத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

** தேசத் துரோக வழக்கு என்ற பெயரில் ‘சிபி’ அமைப்பின் முன்னாள் தலைவர் சப்தர் நடுகாரி உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது இந்தூர் (ம.பி.) சி.பி.அய். நீதிமன்றம்.

** லிபியாவில் நாடு கடத்தப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ராமமூர்த்தி 17 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்.

** மேனாள் மத்திய அமைச்சர் - சமூகநீதி ஆர்வலர் சிவசங்கர் (காங்கிரஸ்) மரணமடைந்தார்.

** அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியப் பொறியாளர் சீனிவாசனை நினைவுகூரும் வகையில், அமெரிக்காவில் (ஒலத்தோ நகரில்) அமைதிப் பேரணி நடைபெற்றது.

** நோக்கியா நிறுவனம் 3310 மாடல் அலைப்பேசியை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

** பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், இந்திய வீரர் முகம்மது ஹஸ்ஷமுதினுக்கு வெள்ளிப் பதக்கம்.

** நடிகை பாவனா கடத்தல் குறித்த பிரச்சினையால் கேரள சட்டப்பேரவை கடும் அமளிக்கு ஆளானது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner