எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவில் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை

களியக்காவிளை, பிப்.28 நித்திரவிளையை அடுத்த கணபதியான்கடவு பகுதியில் கிருஷ்ணன் கோவில் ஒன்றுள்ளது. நேற்று வழக்கம்போல் காலையில் பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜைகள் முடிந்தபிறகு இரவு பூசாரி கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார்.

இன்று (28.2.2017) காலை வழக்க மான பூஜைகள் செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு விரைந்துவந்தனர்.மேலும்இந்தசம் பவம்குறித்துநித்திரவிளைகாவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. அவர்களும் அங்கு வந்தனர்.

கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுஅதில்இருந்தசில் லரைகள்சிதறிக்கிடந்தது.மேலும் அங்கிருந்தரூ.22ஆயிரம்,சாமிக்கு அணிய வைத்திருந்த  பவுன் 2 வளையல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

கோவில் வளாகத்தில் 3 காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. அதனை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் யாரோ ஒருவர் முகமூடி அணிந்துகொண்டு கோவிலின் உள்வரும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காமிராவில் பதிவான காட் சியை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வர வழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.


போக்குவரத்துக்கு இடையூறு விநாயகர் கோவில் இடிப்பு

ஆத்தூர், பிப்.28 சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ராணிப்பேட்டையில் வெள்ளை பிள்ளையார் கோவில் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழை மைவாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக இந்தக் கோவில் இருப்பதாக கூறி கடந்த 2014 ஆ-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த கோவிலை இடித்து அப்புறப்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தக் கோவிலுக்கு மாற்று இடம் ஒதுக்கி விட்டு கோவிலை இடிக்கும்படி இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2 ஆம் தேதி கோவிலை இடிக்க அதிகாரிகள் வந்த போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக கோவிலை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் கோவிலை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கெடு விதித்தனர். ஆனால், அதன் பிறகும் கோவில் இடித்து அப்புறப்படுத்தவில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு அதிகாரிகள் கோவிலை இடிக்க வந்தனர். இந்து சமய அறநிலையத்துறை, வரு வாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடனும், காவல்துறையினரின் உதவியுடனும் வந்தனர்.

15 மணி நேரம் பக்தர்கள் போராட்டம் நடத்தியும் கோவிலை இடிப்பதில் அதிகாரிகள் தீவிரமாக இருந்தனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியே தீருவோம் என்றனர். இன்று (28.2.2017) காலை பக்தர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner