எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை, பிப்.28 ஜாதி பெயர்கள் கொண்ட தெருக்கள், இடங் களின் பெயர்களை நீக்கி, மாற்றுப் பெயர்களை வைக்க நடவடிக்கைஎடுக்கக்கோரிய வழக்கில்தமிழகஅரசுக்குதாக் கீது அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள் ளது.

திருச்சி கல்லுகுழி தம்ம பாலா தாக்கல் செய்த பொதுநல மனு விவரம் வருமாறு:

தமிழகத்தில் சாலைகள், தெருக்களின் பெயர்களோடு, ஜாதிப் பெயரும் இருக்குமா னால்,ஜாதிப்பெயர்கள்நீக் கப்படும். இதை செயல்படுத்த மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிஒன்றியங்கள், பேரூ ராட்சிகள், ஊராட்சிகள் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, அரசின் முடிவை செயல்படுத்தியதற்கு அறிக்கையாக அனுப்ப வேண் டும் என தமிழக அரசு 1978 அக்.,3 இல் அரசாணை வெளியிட்டது.

இதை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக செயல்படுத்தவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரியது மற்றும் நான் பார்த்ததன் அடிப்படையில் ஊர்கள், தெருக்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயர்கள் ஒட்டிக் கொண்டுள்ளன. அர சாணை பற்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஜாதிப் பெயர்கள் கொண்ட தெருக்கள், இடங்களின் பெயர்களை நீக்கி, மாற்றுப் பெயர்களை வைக்க அரசாணைப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தம்பாலா மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் கொண்ட அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சிமற்றும் பஞ்சாயத் துராஜ் முதன்மைச் செய லாளருக்கு தாக்கீது அனுப்பி மார்ச் 17 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner