எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ‘நீட்’ தேர்வு மே 7 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை மலைக்கோட்டை தொடர்வண்டி ஜூன் 8 ஆம் தேதிமுதல் அதிவிரைவு வண்டியாக மாற்றப்படுகிறது.

* அரசு நூலகங்களில் பள்ளி மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் ஏழரை லட்சம் பேர் சேர்ப்பு.

* எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் முதல் பெண் இயக்குநராக எல்.விக்டோரியா கவுரி நியமனம்.

* வங்கிகள் வேலை நிறுத்தத்தால் (28.2.2017) ரூ.1.3 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் முடக்கம்.

* தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் இவ்வாண்டு கிடையாது.

* தமிழக அரசு பள்ளிக்கல்வியில் 3000 ஆசிரியர் பணியிடங்கள் காலி.

* பிளஸ் டூ தேர்வு தொடர்பாக ஏதாவது புகார் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் 8012594114, 8012594115.

* தட்டம்மைத் தடுப்பூசி மார்ச் 14 ஆம் தேதிவரை நீட்டிப்பு.

* தமிழக - ராஜஸ்தான் புதிய அதிவேக ரயில் அறிமுகமாகிறது.

* இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 36 லட்சம் டன் பிஸ்கெட் விற்பனை.

பிஸ்கெட் சாப்பிடுவதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு நான்காம் இடம்.

கடலூர் துறைமுக பணிக்காக மத்திய அரசு ரூ.57.5 கோடி ஒதுக்கீடு.

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 13 ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 1135 காட்டு யானைகள் உயிரிழப்பு.

வனவிலங்குகளின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 400-க்குமேல்.

2014-2015 இல் இந்தியாவில் பருத்தி சாகுபடி 120 லட்சம் ஏக்கர் - 2015-2016 இல் 106 லட்சம் ஏக்கராக அளவில் குறைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner