எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர் கண்டனம் -

போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மருத் துவ முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான ஒட்டுமொத்த இடங்களையும் மருத்துவக் கவுன்சில் ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்தும், போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 150 மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு (எம்.பி.பி.எஸ்.) சேர்க்கப்படுகின்றனர். பல் மருத்துவக் கல்லூரியில்  80 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முதுநிலை பட்டயப் படிப்பிலும், முதுநிலைப் பட்டப் படிப்பிலும் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கையில் இடம் உண்டு.

மொத்த 74 இடங்கள் ரத்து

மயக்க மருத்துவம் (7 MD and 6 DA)

குழந்தைகள் மருத்துவம் 10 MD and 3 DCH)

ரேடியாலஜி (6 MD and 4 DMRD)

மகப்பேறு மருத்துவம் (12 MD - OG and 3 DGO)

எலும்பு மூட்டு அறுவை மருத்துவர் (8 MS and 3 D ORTHO)

பொது அறுவை சிகிச்சை (12-MS)

ஆக 74 முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த 74 இடங்களையும் மருத்துவக் கவுன்சில் (MCI) இவ்வாண்டு ரத்து செய்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

மருத்துவக் கவுன்சில் சமூகநீதிக்கு எதிரானதா?

எம்.சி.அய். என்ற அமைப்பு சமூகநீதியின் வேரில் வேட்டு வைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் புகுத்தி, ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்களின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சியது.

இப்பொழுதோ தமிழ்நாட்டுக்குரிய மருத்துவக் கல்லூரி இடத்தில் - அதுவும் முதுகலைப் பட்டப் படிப்புக்கான இடத்தில் கைவைக்கிறது என்றால், இதனை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

(மருத்துவக் கவுன்சிலின் வேலை மருத்துவக் கல்விக்கு தேர்வு நடத்துவதல்ல என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்புக் கூறி யதும் கவனிக்கத்தக்கது).

தமிழக அரசுக்கும், எம்.பி.,க்களுக்கும் வேண்டுகோள்!

குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், அதனை நிவர்த்தி செய் வதற்கான வழிமுறைகளைக் கூற வேண்டுமே தவிர, மொத்த இடங்களையும் காலி செய்வது ஏற்புடையதல்ல.

தமிழ்நாடு அரசும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளுக்கு அப்பால் நின்று, பிரதமரையும், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும் உடனடியாக சந்தித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  ரத்து செய்யப்பட்ட இடங்களை மீண்டும் கிடைக்கச் செய்ய ஆவன செய்யுமாறு வற்புறுத்துகிறோம்.

போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை!

இல்லையெனில், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மாணவர்கள் போராட்டமாக திராவிடர் கழகம் முன்னின்று நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கால்நடை மருத்துவத்திற்கும்

‘நீட்!’

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு (BVSc)  திடீரென்று ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 1) கடைசி நாள்.  இந்த நிலையில் நேற்று (28.2.2017) திடீரென்று இப்படி ஒரு நாள் இடைவெளியில்  ஓர் அறிவிப்பு என்பது சரியானதுதானா? நீதிதானா? சமூகநீதி என்றால் அவ்வளவு அலட்சியமா?

கல்வித் துறை - பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றாலும் சென்றார்கள் - அதன் முக்கியத்துவம் சீர்குலைக்கப்படுகிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் இதற்கு ஒரே தீர்வு.

திராவிடர் கழகம் ‘கரடியாக’க் கத்திக் கொண்டிருக்கிறது. கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறது. இதில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவேண்டாமா?

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


1.3.2017
சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner