எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 2 பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக்கப்படுகிற சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மய்யம் 109 ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மையை, தமிழக அரசு  ஒப்புக் கொண்டிருக்கிறது.

சட்டத்திற்கு விரோதமாக...

இதன் மூலம் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலத்தில் செயல்பட்டு வரும் ஈஷா மய்யத்தின் விழாவில் பங்கேற்று சட்ட விரோத ஆதிசிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்.

ஈஷா யோகா மய்யத்தால் 109 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஈஷாவுக்கு எதிராக போராட்டங்கள்

இந்த மனுவே ஈஷா மய்யம் சட்டவிரோதமானது என்பதை அம் பலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் இடைவிடாமல் அம் பலப்படுத்தி வந்தன. ஈஷாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தன என்பதும் கவனிக்கத்தக்கது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மய்யம் சட்ட விரோதமாகக் கட்டியுள்ள கட்டுமானங் களை இடிக்கக் கோரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்தம்மாள் தொடுத்த வழக் கில் மாநில அரசும், ஈஷா யோகா மய்யமும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (1.3.2017) தமிழக அரசின் நகர்ப்புற திட்டமிடல் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

நிலங்கள் ஆக்கிரமிப்பு

ஈஷா மய்யம் சார்பில் சிவன் சிலை அமைப்பதற்காகவும், மூன்று மண் டபங்கள் கட்டுவதற்காகவும் ஒரு லட் சம் சதுர அடி அளவிற்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 8, 2016 மற்றும் பிப்ரவரி 15, 2017 ஆகிய தேதிகளில் 19 ஹெக்டேர் தரிசு நிலங்களை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஈஷா யோகா மய்யத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த அனு மதியானது மத வழிபாடு மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தான் வழங்கப்பட்டுள்ளது. இக்கரை போளுவம்பட்டியில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி ஈஷா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சி யரும், தீயணைப்பு துறையும் அனுமதி அளித்தனர்.

மேலும் மலைப்பகுதி பாதுகாப்புக் குழு, வனத்துறை, வேளாண்துறை, மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்றும் ஈஷா மய்யத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

விதிகளை மீறி கட்டடங்கள்

ஈஷா மய்யத்திடம் உள்ள நான்கு நிலப் பட்டாக்களில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான பணி நிறுத்த உத்தரவும், மூடி சீல் வைப் பதற்கான உத்தரவும் 2012 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஈஷா மய்யம் சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இது தொடர் பாக 2012 இல் அனுப்பப்பட்ட அறி விக்கையை எதிர்த்து ஈஷா மய்யம் மேல் முறையீடு செய்துள்ளது.

அரசுக்கு வருவாய் இழப்பு

ஈஷா மய்யத்தில் 109 ஏக்கர் நிலத் தில் அங்கீகாரம் இல்லாத கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈஷா தியான லிங்க மத வழிபாடு என்ற பெயரில் கட்டப் பட்டு வருகின்றன. இதுதவிர சிவன் சிலைஅமைக்கப்பட்டதற்கானநோக் கம் தொடர்பாக அனைத்து ஆவணங் களையும் தாக்கல் செய்ய ஈஷா மய் யத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங் கீகாரமற்ற இடங்களில் கட்டப்படும் கட்டுமானங்கள் தொடர்பாக உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென 2007 இல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அதிகாரிகள் வசூலிக் காததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 3ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner