எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தேவ்ரியா, மார்ச் 2 மத்தியில் கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்த பணிகள் என்ன? என்று பிரதமர் நரேந்திர மோடிக்குஉத்தரப்பிரதேச முதல்வரும், சமாஜ்வாதி தேசி யத் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக உத்த ரப்பிரதேச மாநிலம், தேவ்ரி யாவில்புதன்கிழமைநடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதா வது:

காங்கிரஸ் கட்சியை நாங் கள் எங்கள் மடியில் உட்கார அனுமதித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது மடியின் அளவு பெரிது. ஆகையால் மேலும் பல கூட்டணிக் கட் சிகளை உட்கார வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச சமாஜ்வாதி அரசின் 5 ஆண்டுகால பணிகள் குறித்த அறிக்கையை பிரதமர் கேட்டுள்ளார். அவரிடம் மத்தியில் கடந்த 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்த பணிகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப்பெற்றதால்,நாட்டு மக்கள் அனைவரும் வங்கி களில் நீண்ட வரிசையில் பணத்தைடெபாசிட்செய்ய காத்துக் கிடந்தனர். ஆனால், இதுவரையிலும் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது, எத்தனை பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது? என்பதை தெரிவிக்கவில்லை.

உத்தரப்பிரதேசமக்கள்,ஏற் கெனவே தங்களது பணத்தை டெபாசிட் செய்ய வரிசையில் காத்துக் கிடந்தனர். அதே போல், பாஜகவைத் தோற் கடிக்க வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும்.

சமாஜ்வாதி, -காங்கிரஸ் கூட்டணியை இரண்டு குடும் பங்களுக்கு இடையேயான கூட்டணிஎன்றுபாஜகவிமர் சித்துள்ளது. இது 2 குடும் பங்களுக்கு, இடையேயான கூட்டணி அல்ல. அரசியலை புதிய பாதைக்குக் கொண்டு செல்வதற்கு 2 இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கூட்டணி ஆகும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களை பிடிப்பது குறித்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது தொங்கு சட்டப் பேரவை குறித்து பேசுகிறார்.

இதிலிருந்து அவர் தோல்வியடையப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner