எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாலாசோர், மார்ச் 2 -எதிரிநாட்டு ஏவுகணைகளை இடை மறித்துத் தாக்கும் வகையில், இந்தியா தயாரித்துள்ள சூப் பர்சோனிக் இன்டர் செப்டார் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

புதன்கிழமையன்று காலை 11.15 மணிக்கு, ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில், கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை எதிரே வரச் செய்யப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. முழுக்க முழுக்க இந்திய தரப்பான சூப்பர் சோனிக் இன்டர் செப்டார் வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணை 15 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்தில் பாய்ந்துவரும் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாகும்.

இது ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி 11- ஆம் தேதி சூப்பர் சோனிக் இன்டர் செப்டார் ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக புதனன்று இன்டர்செப்டார் ரகஏவுகணை வெற்றி கரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையில் மொபைல் லான்சர், சுயாதீன மற்றும் இயற்கைத்தன்மை கொண்ட கண்காணிப்புத் திறன், அதிநவீன ரேடார்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner