எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** ‘நீட்’ தேர்வு

மே 7 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

** சென்னை மலைக்கோட்டை தொடர்வண்டி

ஜூன் 8 ஆம் தேதிமுதல் அதிவிரைவு வண்டியாக மாற்றப்படுகிறது.

** அரசு நூலகங்களில் பள்ளி மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் ஏழரை லட்சம் பேர் சேர்ப்பு.

** எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் முதல் பெண் இயக்குநராக எல்.விக்டோரியா கவுரி நியமனம்.

** வங்கிகள் வேலை நிறுத்தத்தால் (28.2.2017) ரூ.1.3 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் முடக்கம்.

** தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் இவ்வாண்டு கிடையாது.

** தமிழக அரசு பள்ளிக்கல்வியில் 3000 ஆசிரியர் பணியிடங்கள் காலி.

** பிளஸ் டூ தேர்வு தொடர்பாக ஏதாவது புகார் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள் 8012594114, 8012594115.

** தட்டம்மைத் தடுப்பூசி மார்ச் 14 ஆம் தேதிவரை நீட்டிப்பு.

** தமிழக - ராஜஸ்தான் புதிய அதிவேக ரயில் அறிமுகமாகிறது.

** இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 36 லட்சம் டன் பிஸ்கெட் விற்பனை.

** பிஸ்கெட் சாப்பிடுவதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு நான்காம் இடம்.

** கடலூர் துறைமுக பணிக்காக மத்திய அரசு ரூ.57.5 கோடி ஒதுக்கீடு.

** புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 14 ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.

** தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 1135 காட்டு யானைகள் உயிரிழப்பு.

** வனவிலங்குகளின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 400-க்குமேல்.

** 2014-2015 இல் இந்தியாவில் பருத்தி சாகுபடி 120 லட்சம் ஏக்கர் - 2015-2016 இல் 106 லட்சம் ஏக்கராக அளவில் குறைந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner