எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொல்கத்தா, மார்ச் 3 மேற்கு வங்க பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூகி சவுத்ரிக்கு குழந்தைகள் கடத்தலில் உள்ள தொடர்பு குறித்து ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். பிஸ்கெட் கொண்டு செல்லும் பெட்டிகள்மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்த சிஅய்டி காவல்துறையினர், இதுதொடர்பாக தனியார் தொண்டு நிறுவன தலைவர் சந்தானா சக்கரபோர்த்தி மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகள் காப்பகம் நடத்துவதற்கான உரிமத்தை பாஜக தலைவியான ஜூகி சவுத்ரி பெற்று தந்தது தெரியவந்தது. அந்தக் காப்பகத்தில் இருந்து 17 குழந்தைகள் விற்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் புதனன்று கைது செய்யப்பட்டார். பாஜக மேலவை உறுப்பினர் ரூபா கங்குலிமூலம் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய வர்கியாவை ஜூகி சவுத்ரி தொடர்பு கொண்டு காப்பகம் நடத்துவதற்கான உரிமம் நீட்டிப்பு பெற முயற்சி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இதுபற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பாஜக மேலவை உறுப்பினர் ரூபா கங்குலி, தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்டோருக்கு தொடர் இருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், சிஅய்டி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப் படுத்தினர்.

இதனிடையே தலைமறைவான மேற்குவங்கமாநில பாஜக பொதுச்செயலாளர் ஜூகி சவுத்ரியை இந்திய - நேபாள எல்லை யில் சிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner