எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மகராஜ்கஞ்ச், மார்ச் 3 உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் நேற்று (2.3.2017) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மோடி வாக்குறுதிகளை மட்டுமே தருகிறார். ஆனால் நாங்கள் வேலை செய்கிறோம். மோடி அளிக்கும் வாக்குறுதிகள் இளைஞர்கள் வேலைவாய்ப்பு விஷயத்தில் பொய்யாகிப் போகின்றன.மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் 2019 ஆம் ஆண்டு மோடியை மீண்டும் குஜராத்துக்கே அவர்கள் அனுப்பி விடுவர்.

நான் சவால் விடுகிறேன். மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால், அவர் உ.பி. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யட்டும். உண்மையிலேயே அவர் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நினைத்தால், உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனை விடுத்து உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? - இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner