எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


நெடுவாசல் - எரிவாயு திட்டம் - அது தொடர்பான தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. மத்திய ஆட்சியினர் இதுகுறித்து மக்கள் திருப்தி அளிக்கும் வகையில் எந்த உறுதிமொழியையும் இதுவரை கொடுக்கவில்லை.

தமிழக பி.ஜே.பி.யினரோ தலைக்குத் தலை உளறுகின்றனர். இந்திய வளர்ச்சிக்காக தமிழ்நாடு தியாகம் செய்யக்கூடாதா என்கிறார் திருவாளர் இல.கணேசன் எம்.பி.,

தீவிரவாதிகள், தேசத் துரோகிகள் போராட்டத்தை பின்னிருந்து இயக்குவதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஆவேசமாகப் பேசுகிறார்.

இந்த எரிவாயு திட்டத்தின் பின்புலத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த கார்ப்பரேட்டுகள் இருக்கின்றன என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

இதுகுறித்து நாம் கண்டன அறிக்கை (22.2.2017) ஒன்றை வெளியிட்டு இருந்தோம். புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, காரைக்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் இந்த மக்கள் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பைத் தருவதோடு ஆக்க ரீதியான எல்லா வகையான ஒத்துழைப்பையும் அறவழியில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்த பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தி, விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது  அவசியம்.

கி.வீரமணி
4.3.2017                                                                        தலைவர்
சென்னை                                                               திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner