எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு தருமபுரியில்                           * மாணவர் அணி மாநாடு சென்னையில்
*ஒவ்வொரு சனி, ஞாயிறிலும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்               *பெரியார் சமூகக் காப்பணி புதுப்பிப்பு

சென்னை, மார்ச் 5 திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவரணி, கலந்துரையாடலில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் எழுச்சியூட்டும் வகையில் சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

05.03.2017 அன்று சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி மாநில கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் - 1
இரங்கல் தீர்மானம்

திராவிடர் கழகம் எடுக்கும் முயற்சி களுக்கும் குற்றாலம், பெரியாரியல் பயிற்சி முகாம் உட்பட பெரியார் கல்வி நிறுவனங் களுக்கும் பெரிதும் உறுதுணையாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது அளவிட முடியாத மரியாதையும், மதிப்பும் வைத்திருந்த பெரியார் மணியம்மை பல் கலைக் கழக இணைவேந்தரும், VKN நிறு வனங்களின் தலைவரும், கொடையாளருமான VKN கண்ணப்பன் அவர்களின் மறைவிற்கு கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறோம். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள், VKN நிறுவன ஊழியர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 2

கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயலாக்குதல்   

4.02.2017 அன்று மதுரையில் நடைபெற்ற கழகப்பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் - 3

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேன்
நிதி உழைத்தவர்களுக்கு பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயண வேகத்திற்கு வேன் ஈடுகொடுக்க முடியாமல் பழுதான நிலையில், தமிழர்களின் பாதுகாப்பு கேடயமாகவும், உரிமை மீட்புப் போரில் முதன்மையாக நின்று 84 வயதிலும் ஓய்வில்லாது சுற்றுப்பயணம் செய்துவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர்கழக இளைஞரணி - மாணவரணி சார்பில் தமிழர் தலைவரின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக புதிய பரப்புரை பயண ஊர்தி வேன் வழங்கிட 15.09.2016 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக இளைஞரணி - மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 3 மாதக்காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத் துத் தரப்பு மக்களையும் சந்தித்து (கடைவீதி வசூல் உட்பட) இலக்கையும் தாண்டி நன் கொடையைத் திரட்டிட உழைத்திட்ட கழக இளைஞரணி - மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கிய கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மருத்துவரணி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கும் நன்கொடை வழங்கிச் சிறப்பித்த கொடையாளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் வேனை நவீன முறையில் வடிவமைக்க பொறுப்பேற்று செயல்படுத்திய கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 4
மனுதர்ம எரிப்புப் போராட்டம்

அன்னை மணியம்மையார் பிறந்தநாளான மார்ச்-10 அன்று மகளிரே முன்னின்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தில் கழக இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்வது என முடிவுசெய்யப்படுகிறது.

தீர்மானம் - 5
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநில மாநாடு

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை தருமபுரியிலும், திராவிடர்மாணவர்கழக மாநில மாநாட்டை சென்னையிலும் நடத்துவதற்கு அனுமதியும், தேதி ஒதுக்கித் தருமாறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 6
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

கழக இளைஞரணி-மாணவரணி தோழர்களுக்கு கொள்கைத் தெளிவை உண்டாக்கும் நோக்கோடு பெரியாரியல்  பயிற்சிப்பட்டறைகளை மண்டல வாரியாக (2 நாட்கள்) நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் - மாணவர்கள் பெருமளவில் பங்குபெறவும், ஒத்துழைப்பும் வழங்கிடுமாறு கழக பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 7
இளைஞரணி - மாணவரணி தோழர்களை களப்பணியாளராக்குதல்

கழகத்தின் சார்பில் நடைபெறும்போராட்டங்கள், பிரச்சாரப்பணிகள், கழக வெளியீடுகளை பரப்புதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் , நிதி திரட்டுதல் உள்ளிட்ட கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முன்னின்று நடத்துவதற்கு எந்தநேரத்திலும், எதற்கும் தயார் நிலையில் உள்ள கொள்கைத் தெளிவு, ஆளுமைத்திறன் உள்ள இளைஞர்களாக மண்டலத்திற்கு 10 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தனியாக களப்பணி பயிற்சி முகாம்களை நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது.

தீர்மானம் - 8
முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்

கழக கொள்கைளை விளக்கியும், அவ்வப்போது எழும் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தியும் கழக இளைஞரணி - மாணவரணி சார்பில் தெருமுனைக்கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என முடிவுசெய்யப்படுகிறது.

தீர்மானம் - 9
‘நீட்' நுழைவுத் தேர்வுக்கு விலக்கு

பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும் சமூகநீதிக்கு எதிரான மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு  நுழைவுத் தேர்விலிருந்து (நீட்)  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியும் ஒருமித்தக்குரலில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு மத்திய அரசும், குடியரசுத்தலைவரும் ஒப்புதல் வழங்கி 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 10
உலகத் தலைவர் தந்தை பெரியார் நூல் திறனாய்வு

உலகத் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுதிகளையும் - கட்சிகளை கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் ஈர்க்கும் கழகத் தலைவர் அவர்களின் வாழ்வியல் சிந்தனை நூல்களையும், கழகப் புதிய வெளியீடுகளையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியிட்டு, அந்நூல்களைப்பற்றித் திறனாய்வுச் சிறப்புக் கூட்டங்களையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

நூல் வெளியீட்டு நடைபெறும் ஊர்கள்

1. வடசென்னை, 2. தென்சென்னை 3. பொன்னேரி, 4. ஆவடி, 5. தாம்பரம், 6. காஞ்சிபுரம், 7. அரக்கோணம், 8. வேலூர், 9. சேத்துப்பட்டு 10. திண்டிவனம், 11. புதுச்சேரி, 12. நெய்வேலி, 13. கல்லக்குறிச்சி, 14. விருத்தாச்சலம், 15. மத்தூர், 16. தருமபுரி, 17.சேலம், 18. ஓமலூர், 19. ஆத்தூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22 மேட்டுப்பாளையம், 23. நம்பியூர், 24. நீலமலை, 25. கோவை, 26. கணியுர், 27. கரூர், 28. திருச்சி, 29. லால்குடி, 30. பெரம்பலூர், 31. அரியலூர், 32. மயிலாடுதுறை, 33. திருவாரூர், 34.நாகை, 35. திருத்துறைபூண்டி, 36. மன்னார்குடி, 37. பாபநாசம், 38. உரத்தநாடு, 39. புதுக்கோட்டை, 40. காரைக்குடி, 41. சிவகங்கை, 42. திண்டுக்கல், 43. தேனி, 44. மதுரை, 45.உசிலம்பட்டி 46. அருப்புக்கோட்டை, 47. ராஜபாளையம், 48. கீழப்பாவூர், 49. தூத்துக்குடி, 50. நாகர்கோவில்.

தீர்மானம் - 11
பெரியார் சமூக  காப்பணி

பெரியார் சமூக காப்பு அணியைப் புதுப்பித்து 2017 மே மாதத்தில் புதிய இளைஞர்களுக்கு பெரியார் சமூக காப்பணி பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner