எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'ஸ்ரீஜகத்' மோடிஜி ஆட்சியில்....

‘‘ஊசி மிளகாய்’

பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் நாடெல்லாம் பரவி ஓகோகோவென்று இளைஞர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள், விவ சாயிகள் எல்லோரும் மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்!

கல்வித் துறையில் கனகச்சிதமாக காவிமயப்பரவல், ஆக்டோபசின் எட்டுக் கைகள், கால்களை விட வேகமாக, கல்வித் துறையில் பெரும் தேசியப் புரட்சியை உண்டாக்கி வருகிறது!

முன்பு புளுகுக் குப்பைகள், பொழுது போக்குக் கதைகள் என்று நினைத்து படித்தவையெல்லாம் இப்போது - புராணங்கள் விஞ்ஞானத்தின் விரிவாக்க முன்னோடிகளாகி, மாணவர் தலைக்கு மேல் கனக விசயன் சுமந்த கல்லைவிட பாரமாக அவர்கள் கழுத்தை நெருக்கிக் கொண்டுள்ளது!

இந்தியா முழுவதும் நடைபெறும் சமஸ்கிருதமயம், பாரதீய கலாச் சாரப் பரப்புரைகள் போன்ற 'புரட்சிகளை' யெல்லாம் மிஞ்சிய ஒரு சரித்திர சாதனை! ஆர்.எஸ்.எஸ். தலைநகரமான நாக்பூரில் மகாராஷ்டிர கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகத்தில் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (அய்யர்)வாளுக்கு ஹானரர்டாக்டரேட், மதிப்புறு முனைவர் பட்டம் என்று 'நீச்ச பாஷையில்' சொல்லக் கூடாது என்பதால் வரும் மார்ச் 9ஆம் தேதி அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் அப்பல் கலைக் கழக சார்பில் அளித்து பெருமைப் படுத்தவிருக்கின்றனரே - அப்பல்கலைக் கழகத்தை!

இந்த சிறப்புப் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி ஜீயும் வந்து கலந்து கொண்டாடவிருக்கிறாராம்!

மோகன்பகவத் அப்பல்கலைக் கழகத்தின் சாதாரண பட்டதாரிதான்; மேல் பட்டப் படிப்பு பட்டம்கூட பெறாத இவருக்கு என்ன இப்போது 'கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை' என்பது போன்ற அவசரம் என்று கேட்காதீர்கள்!

அப்படி அவர் சாதனை செய்த துறைதான் என்ன? என்று கேட்கிறவரின் வாயடைக்கும் வகையில் பதில் இதோ!

"மேல் பட்டப் படிப்பு  (கால்நடை மருத்துவத்தில்) படிக்க இவரால் முடியவில்லையாம்! காரணம் ஏராளமான பசு மாடுகளைப் பாதுகாக்க, பராமரிக்க கோசாலாக்களை உருவாக்கிட காரண மாக அமைந்தாராம்! அதோடுகூட அரசியலில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளாராம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்; அதனால்தான் இந்த (D.LITT) கவுரவ டாக்டர் பட்டமாம்!"

ஸ்ரீஜகத் ஜன்கர் என்ற இணைவேந் தரும் (Pro Chancellor), ஸ்ரீஜகத் ஏ.கே. மிஸ்ரா என்ற துணைவேந்தரும் மோகன்பகவத்தின் கல்வித்துறை, பொது நலத்துறை பணிகளை யெல்லாம் முழுமையாக விவரித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அந்நாட்டின் 'இரும்புப் பெண்மணி' பிரதமர் மார்க்ரெட் தாட்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைகள் வந்தபோதும் அதை நிராகரித்து விட்டது போன்ற பத்தாம் பசலித்தனத்தில் நமது பாரத நாடு - ஞானபூமியின் நாகபுரி பல்கலைக்கழகம் - அதுவும் பா.ஜ.க. ஆட்சியில் - செய்யுமா? அதுவும் அவாள் காவி கட்சியான ஸ்ரீஜகத்

மோடி ஜி ஆட்சியில்....
என்னே கல்விப் புர்-ர்-ர்-ரட்சி
பா.ஜ.க.வின் ஆட்சியில்....

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner