எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கீழ்க்கண்ட கருத்தினை உதிர்த்துள்ளார்.
மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடியாகும் என்று கூறியுள்ளார். மோடி என்ன உ.பி.க்கு மட்டும் தான் பிரதமரா - மற்ற மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்களே, பிரதமரின் கடைக்கண் இம்மக்கள் மீது பாவாதோ!

எப்படி இருக்கு?

திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.8,29 கோடி உள்ளது. இதனைப் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளைத் தர வேண்டும் என்று திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் சார்பாக ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாம்.
சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதே; ஏழுமலை யானுக்கு மட்டும் என்ன விதி விலக்கா?
ஏன், ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அந்த நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற வேண்டியதுதானே! ஆமாம்... சர்வசக்தி கடவுளுக்கு ரூபாய் எதற்கு?

பொன்னார் பொன்மொழி

நெடுவாசல் போராட்டக்காரர்களை டெல்லி அழைத்துச் சென்று அமைச்சர்களை சந்திக்க வைத்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வைப்பேன் என்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
மீனவர் பிரச்சினை, ஜல்லிக்கட்டுப் பிரச்சினை என்று இதுமாதிரி பொன்னார் சொல்லுவது கேட்டுக் கேட்டு  அலுத்து விட்டதே! பொன்னார் இனி 'பொன்மொழிகளை' உதிர்க்க வேண்டாம்.

செய்தியும் சிந்தனையும்

நெடுவாசல்

செய்தி: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற் குக் காரணம் எதிர்க்கட்சிகளே!
- எடப்பாடி பழனிச்சாமி, முதல்  அமைச்சர்

சிந்தனை: ஆக ஒரு முதல் அமைச்சரே மக்களை எதிர்க் கட்சிகள் பக்கம் தள்ளி விடு கிறாரோ!

இன்றையஆன்மிகம்?

ராமநவமி

ராமநவமி என்று ராமன் பிறப்பையும், கோகுலாஷ்டமி என்று கிருஷ்ணன் பிறப் பையும் பக்தியாகக் கொண் டாடுகிறார்கள்.
அதே நேரத்தில் நவமி யையும், அஷ்டமியையும் கெட்ட நாள்களாகப் பார்க்கிறார்களே, எப்படி?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner