எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* போபாலில் இருந்து உஜ்ஜைனிக்குச் சென்ற பயணிகள் ரயிலில் குண்டு வெடித்ததில் 8 பயணிகள் காயமடைந்தனர்.

* நாட்டிலுள்ள 91 முக்கிய நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு அளவு 41 சதவிகிதமாக குறைந்துள்ளது.

* திருமலையில் உள்ள காசிமடத்தில் பல கோடி மதிப்புள்ள நகை, காணிக்கை பணத்தை முறைகேடு செய்து தலைமறைவான சாமியார் சுதானந்தா கைது செய்யப்பட்டார்.

* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் நாளை தொடங்குகிறது.

* ஆதார் எண் பெறும்வரை மாற்று அடையாள சான்றை பயன்படுத்தி அரசு திட்டங்களின் பலனை பெறலாம்.

* வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளுக்கு ஏப்ரல் முதல் மாதம் தோறும் நகராட்சிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் வரும் 10 ஆம் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

* இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ -மாணவிகள் எழுதுகிறார்கள்.

* தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கைக் கடற்படைமீது கடலோர காவல் படை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

* உணவு விநியோகக் கடைகளில் போதுமான இருப்பு வைக்கப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

* தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு 13 ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner