எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னை மணியம்மையார் அவர்களின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதி (1920) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அய்யா - அம்மா நினைவிடங்களில் கழகத் தலைவர் தலைமையில் மலர்வளையம் வைக்கப்படும்.

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக (முக்கியமாக பெண்களுடன்) குறிப்பிட்ட நேரத்தில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலை 11 மணிக்கு அன்னை மணியம்மையார் சிலைமுன்பு ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம் கழக மகளிரணி, மகளிர் பாசறையினரால் எரிக்கப்படும்!

தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner