எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெர்லின், மார்ச் 8 இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்குவோரில் காவல் துறைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினரைத் தொடர்ந்து மத தலைவர்கள் அதிக லஞ்சம் சார்ந்த குற்றங்களில் தொடர்புடையவர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85% பேர் காவல்துறையினர் அதிக ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மத தலைவர்களில் 71% பேர் ஏதாவது ஒரு வகையில் ஊழலில் தொடர்புடையவர்கள் என ஆய்வில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது மத தலைவர்கள் எவ்வித ஊழலிலும் தொடர்பில் லாதவர்கள் என ஆய்வில் கலந்து கொண்டவர்களில் வெறும் 14% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மேலும் 15% பேர் ஊழல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.   இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்கும் துறைகளில் காவல்துறையினர் 85%, அரசு அதிகாரிகள் 84%, வியாபார நிர்வாகிகள் 79%, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 78% மற்றும் மத்திய அமைச்சர்கள் 76% உள்ளிட் டோர் டாப் 5 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து வரித் துறை அதிகாரிகள் 74% பெற்று ஆறாவது இடமும், மதத் தலைவர்கள் ஏழாவது இடத்திலும் உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வினை ஜெர்மனியின் பெர்லினை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner