எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, மார்ச்.9 இந்தியாவில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் எட்டு நீதிமன்றங்களில் பெண் நீதிபதி ஒருவர்கூட இல்லை.

பெண் வழக்குரைஞர்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது. கார்ப்போரேட் நிறுவனங்களில் பெண் வழக்குரைஞர்களின் தேவை அதிகரித்து வருகின்ற அதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்கின்ற எண்ணிக்கை 61 விழுக் காட்டளவில் உயர்ந்தும் காணப்படு கிறது.

இந்திய நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் நிலை என்ன என்றால், மக்களவையில் அளிக்கப்பட்ட தகவ லின்படி, உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 10 விழுக்காட்டுக்கு மேல் பெண் நீதிபதிகள் இல்லை.

2016ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் 24 நீதிபதிகளில் பெண் நீதிபதியாக ஆர்.பானுமதி ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் 1981ஆம் ஆண்டிலிருந்து சட்டத்துறையில் பணி யாற்றி வருபவர் ஆவார்.

நாடுமுழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் உள்ள 652 நீதிபதி களில் 69 பேர் மட்டுமே பெண் நீதிபதி களாக உள்ளனர் என்று மக்களவை அறிக்கை குறிப்பிடுகிறது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கை யில் பெண் நீதிபதிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உள்ளனர். மும்பை உயர்நீதிமன்றத்தில் 62 நீதிபதிகளில் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர். இரண் டாம் இடத்தில் டில்லி உயர்நீதிமன்றம் உள்ளது. டில்லி உயர்நீதிமன்றத்தில் 39 நீதிபதிகளில் 11 பேர் பெண் நீதி பதிகள் ஆவர். மும்பை, டில்லி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி களாகவும்  பெண் நீதிபதிகள் உள்ளனர்.

நாடுமுழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் எட்டு உயர்நீதிமன் றங்களில் பெண் நீதிபதி ஒருவர்கூட நியமிக்கப்படாத நிலை உள்ளது.

உயர்நீதிமன்றங்களில் அதிக எண் ணிக்கையில் 85 நீதிபதிகளைக் கொண் டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏழு பெண் நீதிபதிகள் உள்ளனர்.

பெண்களில் வழக்குரைஞர்களாக தங்களைப்பதிவு செய்து கொண்டுள் ளவர்கள் 2011ஆம் ஆண்டில் 2.3 மில்லியனிலிருந்து 2015ஆம் ஆண்டில் 3.8 மில்லியன் அளவில் அதிகரித்துள் ளனர். அதே கால கட்டத்தில் ஆண்கள் 38 விழுக்காட்டளவில் மட்டுமே எண் ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.

இளங்கலை சட்டப்படிப்பு முடித்து வழக்குரைஞர்களாக பதிவு செய்துகொண்டுள்ள பெண்கள் 2011ஆம் ஆண்டில் 45,056 எண்ணிக்கையிலிருந்து 2015ஆம் ஆண்டில் 84,880 ஆக எண்ணிக்கையில் 88 விழுக் காட்டளவில் அதிகரித்துள்ளனர்.

அதேகாலகட்டத்தில் ஆண் வழக் குரைஞர்களாக பதிவு செய்து கொண் டுள்ள ஆண்கள் எண்ணிக்கை  98,836 லிருந்து 1,94,409ஆக 49 விழுக்காட்ட ளவில் மட்டுமே அதிகரித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல், செய்தித் தாள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள் ளவாறு பெண் வழக்குரைஞர்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக கார்ப்போரேட் நிறுவனங் களில் பெண் வழக்குரைஞர்கள் தேவை அதிக அளவில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பரில் வெளி யான செய்தி அறிக்கையின்படி, 1950ஆம் ஆண்டிலிருந்து 229 நீதிபதி களில்  உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங் களில் நீதிபதிகளாக ஆறு பேர் மட் டுமே பெண்களாக இருந்துள்ளனர்.

உச்சநீதிமன்ற பெண் வழக்குரை ஞர்கள் சங்கம் சார்பில் மார்ச் 2015ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில்  உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில், தகுதிவாய்ந்த பெண்களை நீதிபதி களாக நியமனம் செய்யவும், நீதிபதி கள் பணியிடங்களில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளித்திட பரிசீலனை செய்ய வேண்டியும்  வழக்கு தொடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். கேகர் கூறும்போது, “ஆண் வழக்குரை ஞர்கள் மற்றும் பெண் வழக்குரை ஞர்கள் விகிதம்குறித்து முதலில் அறிய விரும்புகிறோம். அது மிகவும் முக்கியமானது. இருபால் வழக்குரை ஞர்கள் விகிதாச்சாரத்தின்படி, இரு பால் நீதிபதிகள் இருக்கவேண்டியது அவசியமாகும்’’ என்றார்.

கவலைஅளிக்கும் ஆண், பெண் விகிதம்:

மூத்த பெண் வழக்குரைஞர்

உச்சநீதிமன்ற பெண் வழக்குரை ஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த மூத்த பெண் வழக்குரைஞரான மகாலட்சுமி பவானி பதிலுரையில் குறிப்பிடுகை யில், “பெண் வழக்குரைஞர்கள் எண் ணிக்கையை தயவுசெய்து ஒப்பிடக் கூடாது. இருபால் நீதிபதிகள் எண்ணிக் கையில் பெண்களின் விகிதத்தில் பெண்களின் நிலையை எண்ணிப் பார்த்திட வேண்டும்.  1922 ஆம் ஆண்டு முதல்தான் பெண்கள் வழக்குரைஞர் களாக பணியாற்ற அனுமதிக்கப்பட் டார்கள். நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்கள் பணியாற்றும் போது, பல்வேறு வகைகளிலும் பிரச் சினைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலையிலும், பெண்கள் ஏராள மானவர்கள் வழக்குரைஞர்களாக பணியாற்ற முன்வருகிறார்கள்.

நீதித்துறையில் உயர்பதவிகளில் பெண் நீதிபதிகளுக்கு போதிய அள வில் பிரதிநிதித்துவம் அவர்களின் அனுபவம் மற்றும் தகுதிநிலைக்கேற்ப அளித்திட வேண்டும். மாபெரும் அள விலான மக்கள் தொகை உள்ள ஜன நாயகத்தில் ஆண்களுடன் ஒப்பிடு கையில் பெண்களின் விகிதம் என்பது கவலை அளிக்கிறது. கருவில், தாக் குதலில், குடும்ப வன்முறைகளில், பெண்கள் கடத்தப்படுவதில், சொத் துரிமைகளில் இன்னமும் பெண் களைப் பாதுகாக்க வேண்டிய அவசி யம் உள்ளது.     அப்போதுதான் உரிய நீதி கிடைக்கும் வகையில் பெண்களின் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதித்துவம் கிடைக்கும்’’ என்றார்.

பெண்களுக்குரிய நீதியைப் பெற்றிட, அவசியம் ஏற்படுமானால், நீதித்துறைக்கான நடைமுறைகளிலும் பகுத்தாய்தல் வேண்டும் என்று பன் னாட்டு சட்ட வல்லுநர்கள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner