எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

*              காமராஜர் துறைமுகத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என்று சிஅய்டியூ வலியுறுத்தியுள்ளது.

*              தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  அமல்படுத்தக் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் 270 கிலோ மீட்டர் நடை பயணத்தை சென்னையில் 19ஆம் தேதி தொடங்குகிறார்.

*              தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

*              இலங்கைக் கடற்படையினர் நடத்திய  துப்பாக்கிக் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

*              கச்சத்தீவில் நடைபெற உள்ள விழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிப்பதாக விழா ஏற்பாட்டாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

*              ஏழைப் பெண்கள் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

*              கடந்த 2 மாதங்களாக நடந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிந்ததையடுத்து வரும் 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

*              பெங்களூருவில் 'சிக்ஸ் பேக்" உடற்கட்டுக்கு ஆசைப்பட்டு, குதிரைக்கு பயன்படுத்தும் ஊசியை பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்தார்.

*              சென்னையில் உள்ள 13 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழை இந்திய பசுமை கட்டட கவுன்சில் வழங்கியது.

*              மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து டில்லி, சிங்கப்பூருக்கு விமானங்களை பெண்களே இயக்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner