எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு முழுவதும் முக்கியப் பெரு நகரங்களில், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், காவலர்கள், ஊடக வியலாளர்கள், தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள்-பத்திரிகையாளர்கள்முன்னிலையில்,ஜாதியை - வருணாஸ்ரம தர்மத்தை - பெண்ணடிமையை வலியுறுத்தி, பெண்ணினத்தை மிகவும் இழிவு படுத்தி, உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கத்தை தாசி மகன்கள் என்று கொச்சைப்படுத்திடும் மனுதர்மத்தை, நேற்று அன்னை மணியம்மை யாரின் பிறந்த நாளில், தீயிட்டு, மகளிரே பெரிதும் முன்வந்து எரித்து - பொசுக்கி தங்கள் எதிர்ப்பை ஜனநாயக வழியில் அறப்போராக நடத்தினர். சுமார் 1000 பேர்களுக்குமேல் பெண்கள் கைதாயினர்!

இவர்கள் எவரும் காலையில் போய் மாலை திரும்பி விடுவோம் என்று கருதி மனுநீதி எரிப்புப் போரில் ஈடுபட்டவர்கள் அல்லர். பல மாதம் கடுங்காவல் தண்டனை என்றாலும், நிலைகுலையாத உறுதி படைத்தவர்கள் எந் நிலையிலும்!

இந்தச் செய்தியை பார்ப்பன ஏடுகள் மட்டுமல்ல; தமிழர்களின் நாளேடுகள் உள்பட திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ததுதான் சமூக அக்கறையா? பத்திரிகா தர்மமா? கட்டுப் பாடாக இவர்கள் இருட்டடித்தாலும், நாடு தழுவிய அளவில் இது மக்களிடம் போய்ச் சேர்ந்ததா இல்லையா?

எங்களை மட்டுமல்ல, தமிழின ஊடகக் காரர்களே, உங்களையும், நம் வீட்டுத் தாய்மார்களையும்கூட ‘வேசிகள்’ என்று கூறும் மனுதர்மத்தைக் கொளுத்துவது உங்களை - உங்கள் மானத்தை, மரியாதையைக் காத்திட எங்கள் மகளிர் செய்த தியாகம் அல்லவா? இதைப் புரிந்துகொள்ளக்கூட முடியாதவர்களா நீங்கள்?

மானம் என்றால் அண்ணாந்தா பார்ப்பது?

 

- ஊசிமிளகாய்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner