எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, மார்ச் 12 ‘‘காந்தியடிகள் கொலையாளிகள் 18 ஆண்டுகளுக்கு பின் விடுதலையாகினர். ராஜிவ் கொலையாளிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகும்கூட விடுலையாகாததுஏன்,’’என உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கேள்வி எழுப்பி னார்.

மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:

இந்தாண்டு பொங்கல் முடிந்ததும் வெயிலால் கொதிப்பாக உள்ளது. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தாமிர பரணி, ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னை என இரண்டு ஆண்டாக உயர் நீதிமன்றங்கள் கொதிப்பாக உள்ளன. ‘’ஊழல் இல்லை என யாராவது கூறினால் அது நேர்மையற்ற பேச்சு,’’ என தலைமை நீதிபதி லோதா கூறினார். ‘’ஊழல் செய்த நீதிபதிகள்,’’ என்ற பட்டியலை சாந்தி பூஷன் வெளியிட்டார். தற்போது நீதிபதி கர்ணன் பிரச்சினை. ஆக ஊழல் இல்லாத இலாகாக்களில் நீதித்துறை எம்மாத்திரம்? போராட்டம் வெடிக்கும் போது தான் யார் உண்மையானவர்கள், யார் துரோகிகள், யார் முகமூடிகள் என்பது பற்றி தெரியவரும்.

காந்தியடிகள் 1948 ஜன.,30 இல் கொல்லப் பட்டார். இவ்வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின் 1966 இல் ஆயுள் கைதிகளை விடுதலை செய்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராஜிவ் கொலையாளிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கலாம் என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். அப் போது, முதல்வராக இருந்தவர் குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி விடுதலை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. காங்கிரசிற்கு வெளியே இருந்தவர்கள் இதை எதிர்த்தார்கள்.

கச்சத்தீவில்மீன்பிடிக்கசென்றதமிழக மீனவர்கள் இதுவரை 600 பேர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். கடல் வழியாக வந்து மும்பை தாக்குதலில்பாகிஸ்தான்பயங்கரவாதிகள்ஈடு பட்டனர்.ஆனால்பாகிஸ்தான்மீனவர்அல்லது இந்திய மீனவர் ஒருவர் கூட சுட்டுக்கொல்லப் படவில்லை. குஜராத் மீனவர்களை பாகிஸ் தானும், பாகிஸ்தான் மீனவர்களை குஜராத்தும் சுட்டுக்கொல்லவில்லை. ஒருவேளை குஜராத் மீனவர்சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால்அரசே ஆடும்; ஆட்டம் கண்டுவிடும். கேரள மீனவர் ஒருவரைசுட்டுக்கொன்றதால்இத்தாலிக்காரர் களின்நிலைமையைபார்த்தீர்களா?ஆனால் தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். ஒன்றுமே நடவடிக்கை இல்லை என அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்கள்.

இவ்வாறு முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner