எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘ஜனநாயகம் வாழ்க' என்று கூறிய பிரதமர் மோடியின் விளையாட்டு

கோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சியைப் பிடிக்க

பி.ஜே.பி.யின் குதிரை பேரம் - பதவிப் பேரம்!

ஜனநாயகத்தைக் காக்கும் இலட்சணம் இதுதானா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

5 மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? - கி.வீரமணி

உ.பி., உத்தரகாண்ட்  மாநிலங்களில்  பெரும் பான்மை இடங்களைப் பிடித்த பி.ஜே.பி., பெரும்பான்மை பெறாத கோவா, மணிப்பூரிலும் ஆட்சி அமைக்க குதிரை பேரம், பதவிப் பேரத்தில் ஈடு படுவதுதான் ஜனநாயகத்தினைக் காக் கும் பி.ஜே.பி.யின் இலட்சணமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை  வருமாறு:

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்படி,

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களில்தான் பா.ஜ.க. அதுவும் அத்துணை முயற்சிகளையும் செய்து, ஆண்ட கட்சியான சமாஜ்வாடி(உ.பி.), காங்கிரஸ் (உத்தரகாண்ட்) ஆகிய வற்றின் ஆட்சிகளின்மீது ஏற்பட்ட வெறுப்பு - எதிர்ப்பினைப் (கிஸீtவீ-வீஸீநீuனீதீமீஸீநீஹ்)  பயன்படுத்தி, உ.பி.யில் அதுவும் முழுக்க முழுக்க மதவாத, சில ஜாதியினரின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப் புக் காரணமாக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது பா.ஜ.க. - இது சரியானதே!

குதிரை பேரம் - பதவி பேரம்!

ஆனால், கோவாவில் தனித்த பெருங்கட்சியாகவோ, தனித்த பெரும்பான்மையோ பெறாத, தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. உடனடியாக சில கட்சிகளை தங்கள் வயப்படுத்தி (‘‘குதிரை பேரம்‘’ - பதவி பேரம் என்ற தேன் தடவிய பூச்சுக்களைக் காட்டியோ என்னவோ) 24 மணிநேரத்திற்குள், மத்தியில் இராணுவ அமைச் சராக இருக்கும் மனோகர் பாரிக்கரை  (கோவா முன்னாள்  முதல்வராக இருந்தவரை) மத்திய அமைச்சரவையிலிருந்து கோவா முதல்வராக அனுப்பிட பா.ஜ.க. பார்லிமெண்டரி போர்டு அனுமதி அளித்து, அவரும் உடனடியாக அங்குள்ள ஆளுநரைப் பார்த்து ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்க கோரிக்கை வைக்கிறார்; அது 24 மணிநேரத்திற்குள் ஆளுநரால் ஏற்கப்படுகிறதாம்!

கோவாவில் கொல்லைப்புற வழி!

என்னே இவர்களது (பா.ஜ.க.வின்) விசித்திர ஜனநாயக இலக்கணம், பாடம்! அசல் கேலிக்கூத்து அல்லவா?

கோவா சட்டமன்றம்

மொத்தம் 40 உறுப்பினர்கள்.

(வெற்றி) காங்கிரஸ்      -    17

பா.ஜ.க.      -    13

மராத்திய கோமந்த் கட்சி       -     3

சுயேச்சைகள்       -    3

கோவா பார்வர்டு கட்சி         -    3

தேசிய வாத (என்.சி.பி.) கட்சி     -    1

மொத்தம்         -    40

முறைப்படி ஆட்சி அமைக்க, அறுதிப் பெரும்பான்மை எவருக்கும் இல்லாத நிலையில், அதிகமான எண்ணிக்கை உடைய கட்சி எதுவோ அதைத்தானே முதலில் அழைத்திருக்க வேண்டும்; ஒருக்கால் அவர்கள் ‘முடியாது’ என்று சொன்ன பிறகே மற்றொரு எதிர்க்கட்சியை அழைத்திருக்க ஆளுநர் முன்வரவேண்டும்.

இவ்வளவு அவசர கதியைக் காட்டி, அடுப்பில் ‘ஜனநாயகத்தை வேக வைத்து’, தங்களது ஜனநாயக முகமூடியை கோவாவில் தங்களுக்குத் தாங்களே கழற்றி எறிந்துவிட்டனரே, இது நியாயமானதுதானா? சரியானதுதானா?

மக்கள் தீர்ப்பை மதிக்கிற லட்சணமா இது?

மணிப்பூரிலும் சித்துவேலை!

அதுபோலவே, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க அறுதிப் பெரும் பான்மை பெறாத மற்றொரு மாநிலம் மணிப்பூர்.

அங்கு மொத்த இடங்கள் 60

வென்ற கட்சிகள்

காங்கிரஸ்     -         28

பா.ஜ.க. -         21

தேசிய மக்கள் கட்சி -         4

லோக் ஜனசக்தி -         1

திரிணாமுல் காங்கிரஸ்    -         1

நாகா மக்கள் முன்னணி     -         4

சுயேச்சைகள்  -         1

மொத்தம்   -         60

மணிப்பூரிலும் ஆளுநர் காங்கிரசைத்தானே ஆட்சி அமைக்க, ஜனநாயக முறைப்படி - அரசியல் சட்ட கடமைப்படி முதலில் அழைத்திருக்கவேண்டும்; அங்கும் பா.ஜ.க. தன் ‘சித்து’ வேலையைக் காட்டுகிறதே!

பா.ஜ.க. உண்மையிலேயே ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதானா? நாங்கள் இந்தியாவில் பெரிய தேசிய கட்சியாகி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்போர், இப்படி அதிகார வெறியுடன் - ஜனநாயகத்திற்கு, கோவாவிலும், மணிப்பூரிலும் உலை வைக்க முன்வரலாமா?

இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு நிலையான ஆட்சி இருப்பது சந்தேகமே! ஆட்சி சில மாதங்களுக்குமேல் நீடிப்பது சாத்தியமா? கூடுதல் பலங்கொண்ட மற்ற கட்சிகள் கைபிசைந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பார்களா?

மோடி அலை வீசவில்லை

6 மாதத்திற்குள் பாரிக்கர் மீண்டும் தேர்தலுக்கு நின்றாக வேண்டும்; இது ஒரு கூடுதல் வரிப் பண விரயம்! புதிய இராணுவ அமைச்சர் மத்தியில் மாற்றம் - இத்தனையும் ஜனநாயகக் கேலிக் கூத்தல்லவா? குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. முந்துவதன்மூலம் மோடி அலை வீசவில்லை என்பது விளங்கி விட்டதே! ராகுல் காந்திக்குப் பதில் கூறிய மோடி, ‘ஜனநாயகம் வாழ்க’ என்பதற்கு இதுதான் அர்த்தமா?

போகப் போக ஒப்பனைகள் - மீடியா ஜோடனைகள் கலையும் - உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும்!

பா.ஜ.க.வின் உண்மைத்தன்மை

கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதில் - மத்திய அரசு - உள்துறை - ஆளுநர் நடந்த விதமும், கோவா, மணிப்பூரில் (ஆயாராம் - காயராம் திரைமறைவு நடந்தாலும்) காட்டிடும் அவசரத்தை, பொதுநல ஆர்வலர்களும் எண்ணிப் பார்த்தால் பா.ஜ.க. தலைமையின் உண்மை நிலைமை என்னவென்றே புரியும்.

இரட்டை வேடம் கலையும் வேகமாக!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

 

13.3.2017
சென்னை

Comments  

 
#2 துரை.விஜயகுமார் 2017-03-13 16:50
உத்திரபிரதேசம் மட்டும் அல்ல எந்த மாநிலம் எடுத்துக் கொண்டாலும் பா.ஜ.க வை (பாா்ப்பானை) எதிர் கொள்ளும் தலைவர்கள்
மிக குறைவு.அவர்களை ஒருங்கிணைத்து பெரியார் பயிர்ச்சி கொடுத்தால் இந்திய அளவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.அவர்களை ஒன்று சேர்க்கும் உண்ணதமான பணி செய்ய தமிழர் தலைவரால் மட்டுமே முடியும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 துரை.விஜயகுமார் 2017-03-13 16:34
பார்ப்பான் வாழம் நாடு கடும் புலிகள் வாழும் காடு. பார்ப்பான் நாமம் வாழ்க.
எதிர் பார்ப்பு
இந்திய மாநிலம் அனைத்திலும் உள்ள பார்ப்பானா் அல்லாத அரசியல் தலைவர்கள் மாநாட்டை நடத்த திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யவேண்டும்.அவசியம்,அவசரம்.
துரை.விஜயகுமார்.அண்ணா நகர்.சென்னை.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner