எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத 1519 ஏரி மற்றும் குளங்களை  குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.100 கோடியில் புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை தொடங்கும் 100 நாள் பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து 174 விவசாயிகள் நேற்று டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

* பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி, கோவை எட்டிமடையில் அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் 1600 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.

* பெரம்பலூரில் பெண் சடலத்தை கண்டெடுத்த மந்திரவாதி வீட்டில் 40 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கும்வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தைத் தொடர திருப்பூர், கோவை மாவட்ட விசைத் தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

* கோவா முதலமைச்சரும், பி.ஜே.பி.யைச் சேர்ந்தவருமான லட்சுமி காந்த் பர்சேகர் தோல்வி.

* தமிழக அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு 8 சதவிகிதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner