எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதோ இன்னொரு வியாபம் (ம.பி.) ஊழல்

பி.ஜே.பி. ஆளும் குஜராத்தில்

மருத்துவக் கல்லூரிகளில் பெரும் ஊழல்

அம்பலப்படுத்தியது தகவல் உரிமை ஆணையம்

காந்திநகர், மார்ச் 13 மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வு களில் முறைகேடு நடந்த வியாபம் ஊழல்போல் குஜராத் மருத்துவக் கல்லூரிகளிலும் நடந்துள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது.

குஜராத் அரசு மருத்துவ கல்லூரியிலும் வியாபம் ஊழல் போல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர் வில் தேர்ச்சி பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கல்லூரி பட்டம் வழங்கியிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கண்டுபிடிக்கட்டுள்ளது

இதுகுறித்த புகார்கள் பிரதமர், முதல்வர்அலுவலகங்களுக்குஅனுப்பி வைக்கப் பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் குஜராத் பல் கலைக்கழகத்துடன் இணைந்த முது கலை மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. பிஜே மற்றும் என்எச்எல் கல்லூரிகளில் உள்ள 300 இடங்களுக்கு நடந்த தேர்வில் 900 மாண வர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சுகாதார துறை மருத்துவர்கள், அதிகாரிகள் விதிகளை மீறி பிரபல அரசியல்வாதிகள்மற்றும்தொழிலதி பர்களின் வாரிசுகளுக்கு இடம் வழங்கியுள்ளனர்.

இந்திய மருந்துவ குழு வழிகாட் டுதலின்படி நுழைவு தேர்வுக்கு வராத அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களை முதுகலை மருத்துவ கல்வியில் சேர்க்கக் கூடாது. விதியை மீறி போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு இந்திய மருத்துவ குழுவுக்கு அனுப்பி பிரப லங்களின் வாரிசுகளுக்கு இடம் அளிக் கப்பட்டுள்ளது.

நுழைவு தேர்வு எழுதாதவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. நுழை வுத்தேர்விற்கு வராதவர்கள் தேர்ச்சி பெற்றதாக பதிவேடுகள் தற்போது வரை உள்ளது. சில சேர்க்கைகளுக்கு போலி ஜாதி சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட்டு இந்தியமருத்துவகுழுவைதவறாகவழி நடத்தியுள்ளனர்.இந்தவழியைபயன் படுத்தி அரசியல்வாதிகள் மற்றும் பிரபல தொழிலதிபர்களின் குடும்பங் களை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப் பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில், நுழைவு தேர்வில் 41 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள ஒரு மாணவரின் மதிப்பெண் இந்திய மருத்துவக் குழு பதிவேட்டில் 53 சத வீதம் என்று உள்ளது. அதேபோல் தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப் பெண்களை விட கூடுதலாக பதி வேட்டில் காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில சுகாதார ஆணையர் குப்தா கூறுகையில்,

இது குறித்த புகார் வந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள பழைய பதிவேடுகளை சோதனை செய்ய வேண் டும். புகார் குறித்து பரிசீலனை செய்து பின்னர் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner