எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதிவரை ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வங்கிகள், ஏ.டி.எம். மய்யங்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

* ‘வாட்’ வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 30 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

* பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகியதை அடுத்து, அந்தப் பதவி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 16 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

* போரூர் ஏரியிலிருந்து நாள்தோறும் 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, வீராணம் குழாய்மூலம் சென்னைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* கோவா மாநில சட்டசபையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

* கோவாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரை ஏன் அணுகவில்லை  என காங்கிரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

* இலங்கை எண்ணெய் கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

* அமெரிக்கா மற்றும் சீனா அதிபர்கள் அடுத்த மாதம் சந்திப்பது உறுதி - வெள்ளை மாளிகை தகவல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner