எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக தாழ்த்தப்பட்ட மாணவர்

சேலம் முத்துக்கிருஷ்ணன் ‘தற்கொலை’யின் பின்னணி என்ன?

உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மரணங்கள்பற்றி நீதி விசாரணை தேவை! தேவை!!

தமிழர்  தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

‘ஜனநாயகம் வாழ்க' என்று கூறிய பிரதமர் மோடியின் விளையாட்டு

உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக் கப்பட்ட சமுதாய மாணவர்களின் மர ணங்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதால், இதுகுறித்து மத்திய அரசு விசாரணை ஆணையம் ஒன்றை நிய மித்து உண்மைக் காரணத்தை வெளிச் சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

சேலம் மாணவர் தற்கொலையா?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டவர் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன். ஹோலி விடுமுறையான நேற்று (13.3.2017) நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். பின்னர் தனது நண்பர்களிடம் தூங்கச் செல்வதாகக் கூறிச் சென்றார். காலையில், அவரது அறை வெகுநேரமாகத் திறக்காததால், சக மாணவர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர் தங்கியிருந்த கதவை உடைத்துப் பார்த்தபோது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி முத்துக்கிருஷ் ணன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டி ருந்தார். அதில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தால் மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், ஆய்வு மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் பதிவிட்டிருந்தார் என்பது செய்தி.

உயர்ஜாதி ஆதிக்க வன்மம்!

சிறப்பு உயர்கல்வி பயில தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட இருபால் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதே அரிதினும் அரிது. அப்படிக் கிடைத்து, அக்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அவர்கள் முழு காலத்திலும் படித்து, பட்டங்களைப் பெறுவது என்பது முயற்கொம்பே!

இதில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்க வன்மம் பின்திரையில் இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

இதற்கு முன்பு மத்தியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி இருந்தபோது வேணு கோபால் என்ற பார்ப்பனர் எய்ம்ஸ் இயக்குநராக இருந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை நடத்தியபோது - மதிப்பெண்கள் போடுவதில்கூட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்றால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று மாணவர்கள் வெளிப்படையாக சொன்னதை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தால், தற்கொலை செய்துகொண்ட ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தனது முகநூலில் குறிப்பிட்டதன் அர்த்தம் விளங்கிவிடும்.

டில்லி எய்ம்ஸில் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட திருப்பூர் சரவணன் என்ற மாணவனின் உடலைப் பரிசோதித்தபோது, ஊசிமூலம் நச்சு மருந்து ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அந்த மாணவன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அந்த இடம், ஒரு பார்ப்பன மாணவிக்கு அளிக்கப்பட்டது என்பதையும் பொருத்திப் பார்த்தால், உயர்கல்வி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது விளங்காமற் போகாது - போகவே போகாது!

உயர்கல்வி நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் மாணவர் மரணங்கள்

கான்பூர் அய்.அய்.டி              -              20

காரக்பூர் அய்.அய்.டி             -              13

மெட்ராஸ்

அய்.அய்.டி                   -              13

பாம்பே அய்.அய்.டி               -              11

டில்லி அய்.அய்.டி -              6

ரூர்கீ அய்.அய்.டி     -              5

கவுகாத்தி அய்.அய்.டி        -              6

காந்திநகர் (அகமதாபாத்)

அய்.அய்.டி                  -              4

அய்தராபாத்

அய்.அய்.டி                   -              2

டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்த மாணவர்களின் பட்டியல்:

எய்ம்ஸ் டில்லி        -              3

இதில் கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்த முதுகலை மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணனின் மரணம் தற்கொலை என்று காவல்துறை உடனடியாகப் பதிவு செய்தது. இதனை அடுத்து அங்குள்ள மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் மாணவர் உடல் மீள்பரிசோதனை செய்யப்பட்ட போது, அவரது உடலில் யாரோ ஒருவர் நச்சுமருந்தை ஊசி மூலம் செலுத்தியது தெரியவந்தது.  தற்போது அவரது இடம் பார்ப்பன மாணவி ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

எய்ம்ஸ் போபால் -              2

எய்ம்ஸ் புவனேஷ்வர்      -              3

(மூவரும் பழங்குடி இன மாணவிகள் - ஒருவர் எய்ம்ஸ் செவிலியர் கல்லூரி மாணவி)

எய்ம்ஸ் ரிஷிகேஷ் 2

2014 ஆம் ஆண்டு  யுக்தி என்ற முதலாம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவியின் மரணம்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களில் 12 பேர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள்.

அய்தராபாத் தேசிய பல்கலைக்கழகத்தில் 8 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்த ரோகித் வெமுலா தவிர, மற்ற மாணவர்களின் மரணம் பல்கலைக் கழக நிர்வாகத்தால் மூடி மறைக்கப்பட்டது.

ஒரு நிமிடமும் உறங்கக்கூடாது

இந்த 2017 இலும் நம் கண்களுக்கு முன்னாலேயே இந்தக் கொடூரங்கள் நடந்துகொண்டுள்ளன. சமூகநீதியாளர்கள், மதச்சார்பின்மை சக்திகள் ஒரே ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்கவோ, உறங்கவோ முடியாத அளவுக்கு சமூக அநீதிகள் ஆயிரங்கால் பலத்துடன் மோதி ஒடுக்கப்பட்டவர்களை ஒழித்தே தீருவது, சமூகநீதியைச் சவக்குழிக்குத் தள்ளியே தீருவது - தேவைப்பட்டால் நஞ்சை ஏற்றுவது என்கிற அளவுக்கு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன.

தேவை நீதி விசாரணை

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள மரணங்கள் தொடர்பான உண்மைகள் வெளியில் கொண்டுவரப்பட உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒரே குரலில் சுருதி பேதம் இல்லாமல் ஓங்கி ஒலிக்கவேண்டும். உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைக்கும் உறுப்பினர்கள் - இந்த மிக முக்கிய பிரச்சினைமீது ஓங்கி எழுந்து புயலாகக் கர்ச்சனை செய்யவேண்டும். இதனை செய்ய முன்வராவிட்டால், இவர்கள் உறுப்பினர்களாக இருந்து எந்தப் பயனும் இல்லை.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.


14.3.2017 சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner