எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 15- உ.பி.யில் பி.ஜே.பி. வெற்றிக்குக்காரணம்பி.ஜே.பி.ஏற் படுத்திக்கொண்டகூட்டணி;அதே நேரத்தில், எதிரணியினர் சரியான கூட்டணியை ஏற்படுத்தத் தவறியது தான் என்று ஊடகங்கள் கணித்துக் கூறியுள்ளன.

அதன் திரட்டு வருமாறு:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர் தல்களில்நாடுமுழுவதுமிருந்தபொது வான சிக்கல்கள் எதிரொலிக்க வில்லை. முக்கியமாக உத்தரப்பிர தேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டு களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் பற்றிய பேச்சுகள் எழுவதை தவிர்க்க முடியாது. நாட்டிலேயே அதிக மக்கள்தொகை, வாக்களர்கள், அதிக தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம்; அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இம் மாநிலத்தில்கவனிக்கத்தக்கவை பாஜ கவினருக்கும்,எதிர்தரப்பினர் இரு வருக்கும் கிடைத்துள்ள வாக்குகள்.

அனைத்துத் தொகுதிகளிலும் சிறு ஜாதிகட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 312, அப்னா தள் 9, சுஹால்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 4 என்று மொத்தம் 325 தொகுதிகளை அதாவது நான்கில் மூன்றுபங்கு இடங்களைப் பெற்றுவிட்டது.

ஆனால் இது அமோக வெற்றி என்று கூறினாலும், மோடியின் செல் வாக்கு சரிவைச் சந்தித்துள்ளது. 2014- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உபியில் பாஜகவின் வாக்கு விகிதம் 43.6%ஆக இருந்தது, தற்போது 41.4% ஆகக் குறைந்துவிட்டது. அதேபோல் உத்தரகாண்டில் 55.9%-லிருந்து 46.5% ஆகவும் குறைந்திருக்கிறது.

இதிலிருந்து எதிர்க்கட்சிகள் பீகா ரைப் போல் வலுவான கூட்டணி அமைக்காத காரணத்தாலும், சமாஜ்வாதி,- காங்கிரஸ் கூட்டணி கடைசி நேர ஒத்துவராத கூட்டணியினாலும், சமாஜ்வாதி கட்சிக்குள் நிகழ்ந்த குடும்பச் சண்டையாலும் ஏற்பட்ட குழப்ப நிலையும் பாஜகவிற்கு சாத கமாகிவிட்டது. அதேநேரத்தில் மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி நிலை சற்று வித்தியாசமானது. 19 தொகுதிகள் அதற்குக் கிடைத்தாலும் பெரும்பாலான தொகுதிகளில் இரண் டாமிடம் வந்துள்ளது..

தேர்தல் நேரத்தில் அகிலேஷ் யாதவ் குடும்பச் சண்டை உறுதியாக பிற்படுத்தப்பட்ட வாக்குவங்கியில் தயக்கத்தை ஏற்படுத்தியது. வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. மேலும் கடைசி நேரத்தில் காங்கிரசுடனான கூட்டணி சமாஜ்வாடிக் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை.

பீகாரைப்

பின்பற்றியிருக்கவேண்டும்

பீகாரை போன்ற மெகா கூட்டணி உருவாக வேண்டும் என்றால், அதில் பகுஜன் சமாஜ் கட்சியையும்இணைத்திருக்கவேண்டும். தேர் தலுக்கு முந்தைய கூட்டணியில் தனக்கு ஆர்வம் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் பார்க்கலாம் என்ற மாயாவதியின் நிலைப் பாடு அவருக்கே பெருத்த இழப்பை ஏற் படுத்திவிட்டது. சமாஜ்வாடி கட்சியுடனும் பாரதீய ஜனதாவுடனும் வெவ்வேறு தருணங் களில் கூட்டணி வைத்த மாயாவதி, தலித்து களுக்கும்அப்பால்தனதுசெல்வாக்கைவளர்த் துக் கொள்ளத் தன்னுடைய உத்தியை மாற்றிக் கொள்ளவேண்டும். மொத்த வேட்பாளர்களில் நான்கில் ஒரு பகுதியினரை முஸ்லிம்களாக நிறுத்தியும்கூட, முஸ்லிம்களை, தன் பக்கம் ஈர்க்க மாயாவதியால் முடியவில்லை.

வித்தியாசமான பஞ்சாப்

பஞ்சாப்வாக்காளர்கள்வித்தியாசமாக வாக் களித்துள்ளனர். சிரோன்மணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக சிறிய பங்காளிதான்.10ஆண்டுகள்தொடர்ந்துஆட்சி யில் இருந்ததால், மாநில அரசு மீது இயல் பாகவே மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. பாஜகவைவிட காங்கிரசுக்கு பஞ்சாப் முக்கிய மான மாநிலம். காரணம், அங்கே மாற்று சக்தியாக வர, ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக முயன்றது. ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் தோற்றிருந்தால் அதன் விளைவு தேசிய அள வில் வேறு விதமாக இருந்திருக்கும்.

முன்பு தேசியத் தலைவர்களை மட்டுமே கொண்டிருந்த காங்கிரஸ். அந்நிலைமாறி  மாநில அளவில் வலுவான தலைவர்களை உருவாக்கவேண்டும் அப்படி மாறினால் தான் வாக்குகளை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும். பிற மாநிலங்களிலும் வெற்றிபெற, அம்ரீந்தர் சிங்கிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். பாஜகவில் அதிகாரமெல்லாம் ஒரேயொருவரி டம் குவிந்து கிடக்கிறது. இது மிகவும் ஆபத் தானது, விரும்பத்தகாதது. காங்கிரஸ் இதற்கு நேர்மாறாக நடந்துகொள்ள வேண்டும்.

பாஜகவிற்கு மாற்றான வலுவான தேசியக் கட்சியாக மீண்டும் காங்கிரஸ் மக்கள் மனதில் காலூன்றவேண்டும்

மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகளைப் பெற்றாலும், போதிய இடங்களைப் பெறத் தவறிவிட்டது.  கோவா யூனியன் பிரதேசத்தில் தனது பலத்தை இழந்துவிட்டது பா.ஜ.க. அங்கே முதல்வர் லட்சுமிகாந்த் பாரிக்கர் உள்பட பல கேபினெட் அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். கோவாவில் 5 ஆண்டுகள் பதவியிலிருந்த பிறகு, அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறி யது ஏன் ஏன்று பாஜக மீள்பரிசோதனை செய்யவேண்டும். ஊழல்,மற்றும் அராஜகத்தை மக்கள் ஏற்பதில்லை. பெரும்பான்மையைப் பெறாமல் இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சிய மைப்பது பாஜகவின் பெயரை வருங்காலத்தில் மேலும் கெடுத்துவிடும்.

தேவை வலுவான கூட்டணியே!

இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது 2014-ஆம் ஆண்டு மோடிக்குக் கிடைத்த வாக்குகள் உறுதியான எதிர்கட்சிகளும் கவர்ச்சி கரமான தலைவர்களும் இல்லாததே என்று தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி தன்னை வலுப் படுத்திக் கொள்வதுடன்,வலுவான கூட்டணி வைத்து செயல்படவேண்டும். பாஜக என்னும் மலைபோல் தெரியும் மாயையை எதிர்கொள்ள வலுவானகூட்டணிஅமைக்கவேண்டும்.இல்லையென்றால் மீண்டும் மோடி மாயை முன்பு மக்கள் மண்டியிட்டு விடுவார்கள்.

அக்பர்பூர் ரன்யா

பாஜக பிரதிபா சுக்லா 87430 வாக்குகள்

சமாஜ்வாடி  நீரஜ் சிங் 58701 வாக்குகள்

பகுஜன் சமாஜ்வாடி             சத்தீஷ் சுக்லா 45761 வாக்குகள்

ஆலப்பூர்

பாஜக அனிதா 72366  வாக்குகள்

சமாஜ்வாடி  சங்கீதா 59853  வாக்குகள்

பகுஜன் சமாஜ்வாடி             திருபுவன் தத் 58591  வாக்குகள்

அலிகஞ்ச்

பாஜக சத்யபால்சிங் ராத்தோர் 88695  வாக்குகள்

சமாஜ்வாடி  ராமேஷ்வர் சிங் யாதவ் 74844  வாக்குகள்

பகுஜன் சமாஜ்வாடி

அவதபால்சிங் யாதவ் 46275  வாக்குகள்

அலகாபாத் மேற்கு

பாஜக சித்தார்த் நாத் சிங் 85518  வாக்குகள்

சமாஜ்வாடி  ரிச்சாசிங் 60182  வாக்குகள்

பகுஜன் சமாஜ்வாடி             பூஜாபால் 40499  வாக்குகள்

அமேதி

பாஜக கரிமாசிங் 64226  வாக்குகள்

சமாஜ்வாடி  காயத்திரிபிரசாத்59161  வாக்குகள்

பகுஜன் சமாஜ்வாடி             ராம்ஜி யாதவ் 30175  வாக்குகள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner