எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயிர்ப் பறிக்கும் மாஞ்சா!

மாஞ்சா நூலில் பட்டத்தைப் பறக்கவிடும் பழக்கம் குறிப்பாக சென்னையில் அதிகம். இந்தக் கயிறு, இரு சக்கர வாகனங்களில் செல்லுவோரின் கழுத்தில் சிக்கி உயிரையும் பறித்து விடுகிறது. இம்மாதம் 7 ஆம் தேதி கொளத்தூர் மின்பொறியாளர் சிவப்பிரகாசம் என்பவரின் உயிரைப் பறித்தது.

இது அவ்வப்பொழுது நடந்துகொண்டுதான் உள்ளது. அதிகாரப்பூர்வமாக இது தடை செய்யப்பட்டு இருந்தாலும், இந்த

மாஞ்சாநூல் தயாரிப்பும் - உயிர்ப்பறிப்பும் நடந்த வண்ணம்தான் உள்ளன.

இப்பொழுது சென்னைப் பெருநகரக் காவல்துறை ஓர் அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் 336 (உயிருக்கு ஊறுவிளைவித்தல்), 338 (கொடுங்காயங்கள் உண்டாக்குதல்), 304 (மரணம் ஏற்படும் என்று தெரிந்தே உயிருக்கு ஊறுவிளைவித்தல்) இவற்றின்படி வழக்குப் பதிவு செய்யப்படும். ஆறு மாதம் முதல் ஆயுள்தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும்.

‘தி(தெ)ருவாய்!’

இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற தமிழக மீனவர் பலியானார் அல்லவா? அவர் பயன்படுத்திய படகு மத்திய அரசுக்கு எதிராக பணம் கொடுக்கப்பட்டு மக்களைத் தூண்டும் கும்பலுடையது என்று கூறி இருப்பவர் பி.ஜே.பி.யின் தேசிய செயலாளரான பார்ப்பனர் ஒருவர்.

பலியானவர் பெயரும் பிரிட்ஜோ என்று இருக்கிறது -  கேட்கவும் வேண்டுமோ!

இப்படியே நாக்கொழுப்பெடுத்து அவாள் பேசிக்கொண்டே இருக்கட்டும்!

பா.ஜ.க.வும் - பார்ப்பனரும் வெகுமக்களால் மேலும் வெறுக்கப்படும் தீயின் டிகிரி அப்பொழுதுதானே அதிகரித்துக் கொண்டே போகும்.

பேர் சொல்லக்கூட ஆளில்லாத நிலை ஏற்படவேண்டும் அல்லவா!

எது உண்மை?

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யைவிட காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரசை அழைக்காமல் பா.ஜ.க.வை ஆளுநர் அழைத்ததுபற்றி சர்ச்சை எழுந்துள்ளது அல்லவா? காங்கிரஸ் தன்னை அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் ஏன் வைக்கவில்லை என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பதில் சொன்னார்.

ஆனால், உண்மைதான் என்ன?

நாங்கள் உரிமை கோரியும், ஆளுநர் எங்களை அழைக்கவில்லை. நேரம் ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். இதற்கு என்ன பதில்?

ஆளுநர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தானே! பி.ஜே.பி.யின் கைப்பொம்மைகள்தானே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner