எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அய்தராபாத், மார்ச் 16 அய்த ராபாத்தில் உள்ள தெலங்கானா மேலவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தெலங்கானா முதல்வர் கே.சந் திரசேகர ராவ் நேற்று பேசியதாவது:

மக்கள் நினைத்த ஆட்சி

காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கும் வகையில் தெலங்கானாவில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இப்போது இங்கு மக்கள் நினைத்த ஆட்சி நடை பெற்று வருகிறது. எங்கள் ஆட்சிமீது அவர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

மூட நம்பிக்கையை ஒழிக்க...

தமிழகத்தில் மூட நம்பிக் கையை ஒழிக்க மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. ஈ.வே.ராமசாமி (எ) பெரியார் தலைமையில் நடந்த இப் போராட்டம் குறித்து படித்து தெரிந்துகொண்டேன்.இதுபோலத் தான் நானும் தெலங்கானா மாநிலத்துக்காக நம்பிக்கையுடன் போராடினேன். இதற்கு வெற்றி கிடைத்தது.

டில்லியில் போராட்டம்

சமீபத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. அப்போது மக்களின் பலதரப்பட்ட மனக்குமுறல்கள் வெடித்தன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், போராட்டத்தில் அவர்கள் வெற்றி கண்டனர்.

அதைப்போலஇடஒதுக் கீடு விஷயத்தில் மீண்டும் போராட்டத்தைக் கடைபிடிக்க வேண்டிய நிலை வரலாம். இதில் நாம் தமிழகத்தைப் பின்பற்றி போராட வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசி, டில்லியில் ஜந்தர் மந்தர் முன்பு போராட்டம் நடத்தவும் நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner