எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி. முதலமைச்சர் பட்டியலில் இடம்பெற்றுள்ள

சாமியார் ஆதித்யநாத் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி வாசகம்

‘‘முஸ்லிம்களே ஊரை விட்டு வெளியேறுங்கள்!''

இதுதான் சுவரொட்டியின் வாசகம்!!

நாட்டைவிட்டு பி.ஜே.பி.யை விரட்டாவிட்டால் இதுதான் நிலை!

லக்னோ, மார்ச் 17 உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியில் 14 ஆம் தேதி அதிகாலை இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளபகுதியில்,‘‘இஸ்லாமியர்களே, உடனே இந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள்!’’ என்று மிரட்டல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதன் கீழே இந்துக்களின் பாதுகாவலன் யோகி ஆதித்யநாத் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சாமியாருமான ஆதித்தியநாத் பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாடி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக இஸ்லாமிய வாக்குகள் முற்றிலும் சிதறிப்போனது. இதனால்,உத்தரப்பிரதேசத்தில்நான்கில் மூன்று பங்கு இடங்களைப்பெற்ற பாஜக விரைவில் ஆட்சி அமைக்க விருக்கிறது. முதல்வர் பதவிக்கு 80 சட்டமன்ற உறுப்பினர் களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தனக்குத் தான் முதல்வர் பதவி வேண்டும், அதைத்தான் உ.பி. இந்துக்கள் விரும்புகின்றனர், தனக்கு முதல்வர் பதவி கொடுக்காவிட்டால், எனது ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கே தெரியாது என சாமியார் ஆதித்தியநாத் மிரட்டல்விடுத்துவருவதாக பாஜக வட் டாரங்களில் தகவல் வெளியாகிறது. இதனால் 5 நாள்கள் ஆகியும் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திணறி வருகின்றனர்.

அமெரிக்க டிரம்ப்பின் நகல்

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த சுவரொட்டிகளில் ‘‘அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இதன் மூலம் என்ன தெரிவிக்கிறோம் என்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் (3112.2017) அனைத்து இஸ்லாமியர்களும் இந்த ஊரை விட்டு வெளியேறவேண்டும், அப்படி நீங்கள் வெளியேறாவிட்டால், அதன் பிறகு என்ன நடக்கிறதோ அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். நீங்கள் வெளியேறாவிட்டால், அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதையே இங்கே நடைமுறைப்படுத்துவோம்.ஏனென்றால் இங்கே இந்துக் களின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. விரைவில் முடிவெடுங்கள், இனிமேல் நீங்கள் இங்கே இருக்க தகுதியிழந்து விட்டீர்கள்!’’ என்று எழுதப்பட்டி ருந்தது.

இதுகுறித்து, கிராமத்தில் வசிக்கும் சில இஸ்லாமியர் களிடம் கருத்து கேட்டபோது, ‘‘இதுவரை இங்கே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றது இல்லை என்றும், ஹோலிப் பண்டிகையை கூட அனைவரும் சேர்ந்துதான் கொண்டாடினோம்'' கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த உடன் காவல்துறையினர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி வருகின்றனர். இது தொடர்பாக சில இந்துத்துவா அமைப் புகளைச் சேர்ந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் பலர் காவல்துறையினரின்சந்தேகவளையத்துக்குள் வந்துள்ளனர். மதக் கலவரம் நிகழ்ந்துவிடாதபடி ஆங்காங்கே தீவிர கண் காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரும். சாமியாருமான ஆதித்திய நாத், சாக்ஷி, நிரஞ்சனா ஜோதி போன்றோர் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசிவந்துள்ளனர். இந்த நிலையில், ஆதித்தியநாத் முதல்வர் பதவிக்கு தன்னை நியமிக்கவேண்டும் என்று மிரட்டி வரும் நிலையில், இதுபோன்ற சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் ஒட் டப்படுவது மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner