எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பேருந்துக் கட்டண உயர்வைக் குறைக்காவிட்டால் போராட்டம் - தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* சென்னை ஆர்.கே.நகர் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) வேட்பாளர் மதுசூதனன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடக்கும்.

* ஆர்.கே.நகர் பி.ஜே.பி. வேட்பாளர் இசை அமைப்பாளர் கங்கை அமரன் (பி.ஜே.பி. சார்பில் வேட்பாளரானால் வாக்குக் கிடைக்கிறதோ இல்லையோ ‘பசை’க்குப் பஞ்சமில்லை).

* நீதிமன்ற அவமதிப்புக் காரணமாக சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை.

* சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட வேளச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் புருசோத்தமனுக்கு 10 ஆண்டு சிறை. (தண்டனை இன்னும்கூடக் கூடுதலாக இருக்கலாம்).

* ரேசன் கடைகளில் உளுத்தம்பருப்பு நிறுத்தம்.

* காங்கிரசைச் சேர்ந்த அம்ரீந்தர் பஞ்சாப் முதலமைச்சர் ஆனார்.

* டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரும், சேலத்தைச் சேர்ந்தவருமான முத்துக்கிருஷ்ணன் ஜாதி உணர்வோடு வெறுக்கப்பட்ட காரணத்தால் ‘தற்கொலை’ செய்துகொண்டதாகக் கூறப்பட்டு, சேலத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், பி.ஜே.பி.க்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டு மத்திய இணையமைச்சர் மீது செருப்பும் வீசப்பட்டதாம்.

* தமிழ்நாட்டில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.2100 கோடி இழப்பாம்.

* வடசென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு.

* தமிழக நிதிநிலை அறிக்கையில் - பார்வையற்ற 10 ஆயிரம் பேருக்கு உயர்தொழில்நுட்ப ஊன்றுகோல் வழங்கிட நிதி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறைக்குக் காரணம் மத்திய அரசு என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

* கேரள பட்ஜெட்டில் திருநங்கையர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிய ரூ.500, ரூ.2000 நோட்டை அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.77 வரையில் செலவாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner