எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மார்ச் 18 பெல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் எல்சிஎஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், திருச்சி பெல் பயிற்சிப்பள்ளி அருகே 15.3.2017 அன்று மாலை 4.30 மணிக்கு பெல் வ.ஒ.தொ.நல சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியும், அய்க்கிய ஜனதாதளம், புதிய தமிழகம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி, ஆதி தமிழர் பேரவை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தொ.மு.ச.பேரவை, அமைப்புச் சார தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எழுச்சியுரை ஆற்றினார். உடன் பெல் தி.தொ.க. தலைவர் ம.ஆறுமுகம், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மண்டலச் செயலாளர் மு.நற்குணம், மாவட்டத் தலைவர் ச.கணேசன், வ.மாரியப்பன், ஆல்பர்ட், உடுக்கடி அட்டலிங்கம், சி.மருதை, இரா.தமிழ்ச்சுடர் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner