எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளருக்கு ரூ.3000/- அபராதம் விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

* பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை அரசுப் பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

* கஞ்சா விற்ற சிறுவனுக்கு தண்டனையாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை பணியாற்ற சிறார் நீதிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் செலவினப் பார்வையாளராக அய்தராபாத்தில் பணியாற்றிவரும் இந்திய வருவாய் பணி அதிகாரி அபர்ணா வல்லூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

* புதிய ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

* தமிழக மீனவப் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும் 21 ஆம் தேதி டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

* 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதியளித்துள்ளது மத்திய அரசு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner