எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நீட்’ தேர்வைப்பற்றி ‘துக்ளக்’ (15.3.2017) இவ்வாறு கூறுகிறது.

‘‘கிராமப்புற பின்தங்கிய மாணவர்களின் நலன் கருத்தில் கொள்ளவேண்டியதுதான்; அதேசமயம், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் கல்வித் தரத்தையும், போட்டித் திறனையும் உயர்த்தி வழிகாண வேண்டுமே தவிர, கல்வி ரீதியாகவும், பின்தங்கிய நிலையிலேயே அவர்கள் இருப்பதற்கு வழி செய்துவிடக் கூடாது’’ என்ற கல்வியாளர்களின் வாதத்தை ஒதுக்கிவிட முடியாது என்கிறது ‘துக்ளக்’.

‘துக்ளக்’க்கும், ‘துக்ளக்’கைப்போல பாசாங்கு அழுகையை மேற்கொள்ளும் வகையறாக்களுக்கும் சில கேள்விகள் நம்மி டம் உண்டு.

‘‘கிராமப்புற பின்தங்கிய மாணவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது தான்’’ என்று துவக்கத்தில் கூறியதற்கும், முடிப்பதற்குமிடையே உள்ள முரண் பாட்டைக் கொஞ்சம் கவனியுங்கள்.

கிராமங்களில் மாணவர்கள் பின்தங்கி இருப்பதற்கு, அந்த மாணவர்கள்தான் காரணமா? நகர்ப்புறப் பள்ளிகளின் கட்ட மைப்பு எத்தகையது? பரிசோதனைச் சாலைகள், நூலகங்கள் எல்லாம் நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையே சமமான அள வில்தான் உள்ளனவா?

அந்த சமன்பாட்டுக்குக்காக ‘துக்ளக்’ போன்ற உயர்தட்டு இதழ்கள் குரல் கொடுத்தது உண்டா? ஒரு துணைத் தலையங்கமாவது தீட்டப்பட்டதுண்டா?

அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பாதிக்கப்படுபவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறினால், திறனை உயர்த்த வழிகாண வேண்டும் என்று ஒப்புக்கு, கோழி திருடனும்கூட சேர்ந்து குலவுகிறான் என்ற தன்மையில் எழுதலாமா?

அரசு நடத்தும் +2 தேர்வில் மாணவன் வாங்கும் மதிப்பெண் அவன் தகுதியை எடை போடாதா?

சி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள்தான் தகு திக்கே உரைக் கல்லா? பார்ப்பனர்களுக்கு எது வசதியோ அதுதான் அவர்களின் ஆக மங்களும்,  படிப்புகளும் - அப்படித்தானே!

+2 தேர்வின் அடிப்படையில் வைத்தால் கிராமத்தானும் மதிப்பெண்களை அள்ளி விடுகிறார்கள் - அதற்குள் குறுக்கே பாய்ந்து குரைக்க - குலைக்கவேண்டும் என்ற குள்ள நரித் தந்திரம்தானே இந்த ‘நீட்!’

பார்ப்பான் ஒன்று சொன்னால் நாம் ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner