எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவனை ஏற்காதவர்கள் வெளியேறட்டும் -  சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண் பிணங்களை வெளியேயெடுத்து புணர்ச்சி செய்யுங்கள்- இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு தனிப்படை உருவாக்கப்படும்!

இப்படியெல்லாம் வன்முறை பேச்சு -நச்சுகளை உதிர்த்த யோகி ஆதித்யநாத்தான் உ.பி. முதலமைச்சர்

குஜராத்தையடுத்து உ.பி. ஆர்.எஸ்.எஸின் சோதனைச் சாலையா?

லக்னோ, மார்ச் 20 சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் போடும் யோகி ஆதித்யநாத்தான் உ.பி. முதலமைச்சர். அதன் விளைவு என்னாகும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

2005- ஆம் ஆண்டு கோரக்பூர் பொதுக் கூட்டம்ஒன்றில்பேசும்போதுஇவர்கூறிய தாவது, ‘‘நான் சாமியார் - ஆகவே என்னு டைய குறிக்கோளில் இருந்து விலகி அமைதி யாகிவிடுவேன் என்று கூறுகிறார்கள்; நான் சாமியார்தான்; ஆனால், அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கும் சாமியார் கிடையாது. அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு எனது கைகள் வெறுங்கைகளாகத் தெரியும், பாரதத்தின் புதல்வர்களுக்கு மட்டுமே எனது கையில் என்ன இருக்கிறது என்று தெரியும், எனது லட்சியம் இந்து ராஷ்டிரம், இந்த உத்தரப்பிரதேசம், இந்தியா, இரண்டும் இந்து தேசமாக, அகண்ட பாரதமாக மாறும் வரை நான் ஓயமாட்டேன், எனது கைகளும் அமைதியாக இருக்காது’’ என்று கூறினார்.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போதுபேசியது,‘‘நீங்கள்சிறு பான்மையினர் என்ற தகுதியோடு வாழ்கிறீர் கள். நீங்கள் நிம்மதியாக உயிரோடு வாழவேண்டுமென்றால் எங்களது போக் கிற்கு தடையாக இருக்ககூடாது. இது இந்துக் களுக்கானநாடு,இங்கேஇந்துக்களின்நட வடிக்கைகளை நீங்கள் அமைதியாக வேடிக் கைப் பார்க்கவேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக்கூடாது. அப்படி முட்டுக்கட்டைப் போட்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு ஏற்கெனவே நடத்திக் காட்டியிருக்கிறோம். மீண்டும் நீங்கள் எங்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்’’ என்று கூறினார். இவரது இந்த பேச்சிற்கு தேர்தல் ஆணையம்  விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி இருந்தது.

2014-, ஆக்ரா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது,

‘‘மதச்சார்பின்மை பற்றி பேசும் எதிர்கட்சியினரே, இங்கே 12 லட்சம் சாதுக்கள் இருக் கின்றனர்.ஆனால்,நீங்கள்இஸ்லாமியஇமாம் களுக்கு சம்பளம் கொடுப்பது பற்றி பேசு கிறீர்கள்.இஸ்லாமியர்கள்உங்களுக்குவேண்டு மென்றால் பெரிதாகத் தெரியலாம் எங்களுக்கு அவர்கள்(இஸ்லாமியர்கள்)வளர்ச்சிக்கு தடை யானவர்கள் தான்.’’

2015-, ‘‘சூரிய நமஸ்காரம் குறித்து இந்து அல்லாதவர்கள் (இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்)கவலைப்படுகின்றனர். உண்மையில் நீங்கள் சூரிய நமஸ்காரத்தை வெறுப்பவர்கள் என்றால் போய் கடலில் விழுந்துவிடுங்கள்.’’

அனைவரும் சிவனின் பிள்ளைகளாம்!

‘‘யோகத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும், நாம் அனைவரும் சிவனின் பிள்ளைகள்தான், இங்குள்ளவர்கள் சிவனை வணக்கவேண்டும். உங்களுக்கு யோகாசனம் பிடிக்கவில்லைஎன்றுகூறுகிறீர்கள்.அதற்குக்காரணம்இந்துமதம்,சிவன்என்று கூறுகிறீர்கள்.யோகம்உங்களுக்குபிடிக்க வில்லைஎன்றால்,சிவனைப்பிடிக்கவில்லை என்றுதானே பொருள். சிவனைப் பிடிக்காத வர்கள் இந்தியாவில் இருக்கத் தேவையில்லை. நீங்களாக வெளியேறுகிறீர்களா? அல்லது நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமா? என்பது உங்கள் கையில் தான் உள்ளது.’’

2015-, மதச் சகிப்பின்மை  குறித்து பேசிய இந்தி நடிகர் சாருக்கானின் பேச்சிற்கு கருத்து தெரிவித்தபோது,‘‘சாருக்கானுக்கு இந்து ரசிகர் கள் உண்டு. அவர்கள் அதிக அளவிற்கு படம்பார்ப்பதால்தான்சாருக்கானுக்குபணம் கிடைக்கிறது. இந்துக்கள் அவரைப் புறக் கணித்துவிட்டால் சாருக்கானும், இதர இஸ்லா மியர்களைப்போல் அன்றாடம் வாழ்க்கைக்கு திண்டாடவேண்டிய நிலை ஏற்படும்.’’

இஸ்லாமிய பெண்கள் வயிற்றில் இந்துக்களின் கருக்கள்!

‘‘இந்து பெண் ஒருவர் இஸ்லாமியரின் காதல்வலையில் விழுந்து அவர் இஸ்லாமி யராக மாறிவிட்டால், நாம் நூறு இஸ்லாமியப் பெண்களை இந்துக்களாக மாற்றவேண்டும்.அவர்கள் வயிற்றில் இந்துக்களின் குழந்தை கள் இருக்கவேண்டும். இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆகவே நாம் (இந்துக்கள்) இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திரளவேண்டும்.

அன்னை தெரசா ஒரு புனித துறவி என்பது எல்லாம் பொய், அவர் இங்குள்ளவர்களை ஏமாற்றி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி இந்தி யாவை கிறிஸ்து நாடாக மாற்ற வந்த ஒரு கையாள், போப்பின் கூட்டாளி ஆவார்.

உத்தரப்பிரதேசம் ஒரு காஷ்மீராக மாற வேண்டுமா? கைரனா மற்றும் கண்டியா போன்றமேற்குஉத்தரப்பிரதேசத்தின்ஊர் களில்இந்துக்கள் மிரட்டப்பட்டும் வன்முறை யாலும் விரட்டப்படுகின்றனர். அங்கே எங்கிருந்தோ வந்த இஸ்லாமியர்கள் அப்படி ஓடிப்போனஇந்துக்களின்வீடுகளைஆக் கிரமிக்கின்றனர். ஆனால், நான் ஒரு காஷ்மீ ரைப்போல்,பங்களாதேசத்தைப்போல் இந்துக் களை இவர்கள் (இஸ்லாமியர்கள்) கொலை செய்யவிடமாட்டேன்.’’

தனிப்படையாம்!

2017 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துப் பெண்களை சீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு தனிப்படையை உருவாக்குவோம். அப்படி சீண்டுபவர்களைப் பிடித்து பொது இடத்தில் தூக்கிலிடுவோம். எந்தச் சட்டம் என்ன சொல் கிறது என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை’’ என்று கூறினார்.

‘‘இங்கே இந்துக்கள் கொலை செய்யப்படு கிறார்கள்என்றால் என்ன காரணம்?இஸ்லா மியர்களின்  கொலைவெறிதான் காரணம், இஸ்லாமியர்களின்மனதில்பயத்தைஉரு வாக்கவேண்டும், இஸ்லாமியப் பெண்களை கல்லறையில் இருந்து தோண்டி எடுத்து பொது இடத்தில் வைத்து அந்தப் பிணத்தின் மீது பாலியல் வன்புணர்வு செய்யுங்கள். இப்படி செய்தால்தான் இஸ்லாமியர்கள் பயப் படுவார்கள். (செத்த பிணத்திற்கே இந்த நிலை என்றால், உயிரோடு உள்ள இஸ்லாமியப் பெண்ணிற்கு என்ன நேரிடும் என்பதை அவர்களே ஊகித்துக் கொள்ளட்டும்!)

பசு அன்னையாம்!

இந்துத்துவத்தின் அடையாளம் பசு. அத்தகைய பசுவை ‘பாரத மாதாவாக’ அறிவிக்க வேண்டும். இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாமியர்களும் பசுவை வணங்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பசு அனைவருக்கும் அன்னை போன்றது; ஆகவே, மதம் பாராமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பசுவை வணங்கவேண்டும். நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபிமசூதியைகட்டினார். இது எங்காவது நடந்துள்ளதா? இந்து சமாஜ் ஆட்கள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது எல்லாம் அந்த கியான்வாபி மசூதி நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது. அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன். காசிக்கு அனைவரும் வரலாம். ஆனால் மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதுஇந்துத்துவத்தின் நூற்றாண்டு. இந்தியா வில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இந்துத்துவத்தின் நூற்றாண்டு நடைபெறுகிறது.

அப்பாவி பழங்குடியினர், தலித்துகளை, சேவை என்ற பெயரில், கிறிஸ்தவ மிஷினரி கள் மதமாற்றம் செய்துவருகின்றன. அப்போது வாய்மூடி ஒத்துழைத்த, மதசார்பற்ற சக்திகள், இந்துக்கள்மதமாற்றத்தில்ஈடுபடத்தொடங் கியதுமே அலறுவது ஏன்? நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டு விடக் கூடாது. அயோத்தியில் ராமர்

கோயிலை கட்டுவது நிச்சயம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அலுவலகத்தில் வாசகம்

இவரது அலுவலகத்தில், ‘‘உத்தரபிரதேசத் தையும், இந்தியாவையும் இந்து ராஷ்டிர மாக்கும்(!) வரை நான் ஓயமாட்டேன்’’ என்று எழுதி வைத்திருக்கிறார். அமித்ஷா கோரக்பூர் வந்தபோது, இந்த ரவுடிச்சாமியாரின் அலு வலக வாசகத்தைக் கண்டு இவருக்கு வீர் யோகி என்ற பட்டத்தை வழங்கினார்.

1990ஆம்ஆண்டுமுதல்முதலாக யுவ வாகினி என்ற ஆயுதப்படையை உருவாக் கினார். இந்த ஆயுதப் படையினர் எங்கெல் லாம் மதமாற்றம் செய்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கே சென்று வன்முறையில் ஈடுபடுவார்கள். இந்த யுவ வாகினியில் இளைஞர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி, கத்தி யைக் கையாளுதல் போன்ற பயிற்சிகள் கொடுத்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner