எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சென்னை - கோவளம் அருகே கல்லூரி மாணவர்கள் மூவர் விபத்தில் மரணம் (இரு சக்கர வாகனங்கள் நமது இளைஞர்களிடம் படாதபாடுபடுகின்றன - போக்குவரத்துத் துறை செயல்பாடு?).

* அரசு போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்கள் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

* தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ரூ.35,000 கோடி கடனில் தத்தளிக்கிறது.

* தமிழ்நாடு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 2.3 கோடி பேர் பயணிக்கிறார்கள்.

* வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிக சங்கங்கள் முடிவு செய்தாலும், இன்னும் 30 சதவிகித அளவு விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளன.

* இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் அரியானாவில் நடத்தவிருந்த போராட்டம் ஒத்தி வைப்பு.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய 23 ஆம் தேதி கடைசி நாள்.

* எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31 ஆம் தேதியும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்குகின்றன.

* நாகர்கோவிலில் பிறந்த மூன்றே நாள்களில் இரட்டை பெண் குழந்தைகளை ரூ.58 ஆயிரத்திற்கு விற்ற பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* புதுச்சேரி சட்டப் பேரவை மார்ச் 30 இல் கூடுகிறது.

* மணிப்பூரில் புதிய மாவட்டங்களை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து அய்க்கிய நாகா கவுன்சில் 5 மாதங்களாக தொடர்ந்த போராட்டம் நேற்று

நள்ளிரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner