எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமலை, மார்ச் 20 திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றபோது வேன்மீது லாரி மோதியதில்3பக்தர்கள் இறந்தனர். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம், தும்கூரைச் சேர்ந்த கர்நாடக பக்தர்கள் 12 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். வேனை ஓட்டு நர் விஷால்பாபு(40) ஓட்டினார்.

நேற்று காலை திருப்பதி அடுத்த யாதமரி அருகே வந்தபோது சென்னையிலிருந்து பெங்களூருவை நோக்கி சென்ற டேங்கர் லாரி, வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர் விஷால் பாபு(40), வேனில் பயணம் செய்த பக்தர் காமாட்சி (27) மற்றும் ரதியா என்ற 2 வயது சிறுமி ஆகியோர் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்துதகவலறிந்துவந்தயாத மரி காவல்துறையினர் காயம் அடைந் தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள்வேலூரில்உள்ளதனியார்மருத் துவமனைக்குமாற்றப்பட்டனர்.அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து யாதமரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner