எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில்

அனைத்து பஞ்சாயத்துகளிலும் பள்ளிகள்

லக்னோ, மார்ச் 21  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வித்யாபாரதி என்ற பெயரில் நாடு முழுவதும் ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள்நடத்திவருகிறனர்.இந் தப் பள்ளிக்கூடங்களில் முழுக்க முழுக்க சமஸ்கிருத பாடம், கலாச்சார பழக்கவழக்கம் மற்றும் இந்து மத நூல்கள் கற்றுத் தரப் படுகின்றன. அறிவியல், கணிதம் போன் றவையும் சமஸ்கிருத அடிப்படையில் போதிக்கப்பட்டு வருகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி வைத்து கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித் தது. ஆட்சியைப் பிடித்த பிறகு அது தொடர் பான ஆங்கில நாளேட்டில் வெளிவந்த கட்டுரையில், வித்தியா பாரதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், சிற்றூர்களிலும் நீண்ட காலமாகவே செயல்பட்டு வந் தது என்றும், பள்ளியில் படிக்கும் மாண வர்கள்மூலம் அவர்களின் குடும்ப உறுப்பி னர்கள் சங்பரிவார் அமைப்புகளில் கூட்டங் களில் கலந்துகொள்ளுதல், ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கலந்துகொள்ளுதல் என பலவகையில் மெல்ல மெல்ல மூளைச் சலவை செய்யப்பட்டதன் விளைவு தான் அசாமில் முதன் முதலாக ஆட்சிப்பீடம் ஏறியது பா.ஜ.க.

முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக வித்யாபாரதி அமைப்பு பள்ளிகளைத் திறந்து கிறிஸ்தவ மிஷினரிக்குச் செல்லும் குழந்தைகளை தங்கள் பள்ளிக்கு இழுத்து வரும் வேலையைத் தந்திரமாக செய்து, அப்படி வரும் மாணவர்களுக்கு மூளைச்சலவை செய்கிறது.  அதாவது இவர்கள் சிறுபான்மை கல்வி நிலையங்கள் என்ன தவறு செய்கிறது என்ற குற்றச்சாட்டை வைக்கின்றார்களோ அதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீண்டும் செயல்படுத்த முனைப்பு காட்டிவருகின்றனர்.

மூடப்பட்ட இறைச்சிக்கூடங்கள்

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக ஆதித்ய நாத் சாமியார் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று மாலை அலகாபாத் மற்றும் கான்பூரில் உள்ள இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. இதுகுறித்து அலகாபாத் நகர பொது விநி யோகம் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அலகாபாத்இறைச்சிக்கூடம்உத்தரப் பிரதேசத்தில் 4- ஆவது பெரிய இறைச் சிக் கூடமாகும். ஒர் நாளைக்கு ரூ.25 முதல் ரூ.40 லட்சம்  வருவாயை இந்த இறைச்சிக் கூடங்கள் நகராட்சிக்குஈட்டித்தருகிறது.இந்தஇறைச்சிக்கூடத்தைநம்பி சுமார் 20- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக வும், மறைமுகமாகவும் வருவாய் தேடிக் கொள்கின்றனர். இந்த இறைச்சிக்கூடம் குறித்து ஏற்கெனவே பாஜக பிரமுகர்கள் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை கூறியுள் ளனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று ஆதித்யநாத் சாமியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்று கூறியதுமே, இறைச்சிக்கூடம்தான் அவர் களின் முதல் டார்கெட்டாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆகையால், பொதுவாக வியாழன் அன்றுதான் இறைச் சிக்கூடத்திற்கு விடுமுறை உண்டு. ஆனால், ஞாயிறு முதல் விடுமுறை என்று கூறி மூடிவிட்டோம்.

வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு போன்றவைகளால் சிக்கல் எழும். ஆனால், அரசாங்கத்தைப் பகைத்துக்கொண்டு இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்யவேண்டுமா? என்ற கேள்வி எங்களுக்கு எழுந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

இதேபோல் கான்பூர், இடா போன்ற நகரங்களிலும் இறைச்சிக்கூடம் மூடபட்டுள் ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner