எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 21  நாடு சுதந்திரம் பெற்ற சமயத் தில் நாட்டிலிருந்த தலித்/ பழங்குடி மக்களில் 95 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையை ஒழித்திட அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத் தில், 1980 பட்ஜெட் ஒதுக்கீட்டில் தலித்/ பழங் குடியினருக்கானதுணைத்திட்டத்தைக்கொண்டு வந்தார். அத்திட்டத்தின்படி பட்ஜெட் ஒதுக்கீடுகளில் தலித்/ பழங்குடியினருக்கு அவர் களின் மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையில் நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மோடி அர சாங்கம் இப்போது சமர்ப்பித்துள்ள 2017-2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், திட்டச் செல வினம் என்பதையே ஒழித்துக் கட்டிவிட்டது. அதன் மூலம் தலித்/ பழங்குடியினருக்கான துணைத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டது.

பட்ஜெட் ஒதுக் கீட்டில் தலித்துகளுக்கு 16.6 சதவீதமும், பழங் குடியினருக்கு 8.6 சதவீதமும் ஒதுக்கி இருக்கவேண்டும். தலித்/பழங்குடியின ருக்கு 52,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மொத்த பட்ஜெட் தொகையில் வெறும் 2.50 சதவீதமேயாகும். இது மிகவும் வெட்க கரமானது. தலித்/பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையை எப்போது ஒதுக்கப்போகிறீர்கள்?

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினரும், தேசிய தாழ்த்தப்பட்டோர்ஆணையத்தின் தலைவருமான பி.எல்.புனியா பேசியதிலிருந்து

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner