எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சோழவரம் ஏரி கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுவதுமாக தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளது.

* ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

* கடலூரில் புதை சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

* குஜராத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய அஞ்சல் துறை உயரதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

* ஊழல் வழக்குகளில் 3 நாள்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என  பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார்.

* குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

* நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பதை விளக்க அரசு சார்பில் 571 இடங்களில் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner