எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெய்ப்பூர், மார்ச் 23 இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்தில் குண்டுவைத்து தீவிரவாத செயலில் ஈடுபட்ட இரண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர்களுக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ராஜஸ்தான்மாநிலம்அஜ்மீரில்மிகவும் பழைமை வாய்ந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலமான அஜ்மீர் தர்காவில் 2007, அக்டோபர் 11, அன்று மாலை நேரத்தில் ரம்ஜான் நோன்பு முடிந்த வேளையில் இப்தார் விருந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயமடைந்தனர்.  இச்சம்பவத்தை அடுத்து சுமார் 170 பேர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் 152 பேர் இஸ்லாமியர்கள்.

அப்போது மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாகபெண் சாமியார் சாத்வி ப்ரக்யா தாக்கூர், இராணுவ அதிகாரி புரோகித்மீது விசாரணை நடந்துகொண்டிருந்தது.

இந்த விசாரணையில் கிடைத்த விபரங்களின் அடிப்படையில் மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜுக்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முக்கியக் குற்ற வாளியான சுவாமி அசிமானந்தாவை 2010 ஆ-ம் ஆண்டு சிறப்பு புலானாய்வுத் துறை கைது செய்தது.

அசிமானந்தா

ஒப்புதல் வாக்குமூலம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழி யரான அசிமானந்தா அஜ்மீர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் குண்டுவைத்து தொடர் பான அனைத்து உண்மையையும் நீதிபதியின் முன்பு ஒப்புக்கொண்டார்.   அஜ்மீர்  குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாருடன் இணைந்து செய்து முடிக்குமாறு மோகன் பாகவத் நேரடியாகத் தம்மைச் சந்தித்துக் கூறியது குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அசிமானந்தாவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸி-ன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரை வெறும் விசாரணைக்கு மட்டும் அழைத்து விட்டு வழக்கிலிருந்து தேசிய புலனாய்வுத்துறை விடுவித்துவிட்டது.

நீண்டகால விசாரணைக்குப் பிறகு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுனில்ஜோஷி,  தேவேந்திர குப்தா, பவேஷ்பாய் பட்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது வந்தது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில்,  குண்டு வைத் ததாக சுனில் மற்றும் குப்தா ஆகியோரை குற்றவாளி என்றும், பவேஷ் குண்டு வெடிக்க திட்டம் தீட்டிய குற்றவாளி என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.   குற்றவாளிகளான தேவேந் திர குப்தா மற்றும் பவேஷ்பாய் பட்டேல் ஆகியோருக்கு கிரிமினல் சட்ட பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் சுனில் ஜோஷி  மத்திய பிரதேசத்தில் தங்கி இருந்தபோது பெண் சாமியார் பிரக்யா சிங்கிடம் தவறாக நடக்க முயன்ற காரணத்தால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்  என்று கூறப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இஸ்லாமியர்கள் விசாரணைக் கைதிகளாகவே அய்ந்து ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner