எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி, மார்ச் 23 திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம்வரிசையில்காத் திருந்த ஆந்திர பக்தரை பாது காவலர்கள் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்பு படை வீரர் உட்பட தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரிமாவட்டம்,ஏலூரு பகுதியைச் சேர்ந்தவர் பத்ம நாபம் (58). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்வதற்காக பத்மநாபம் குடும்பத்தினர் வைகுண்டம் பகுதியிலுள்ள சர்வ தரிசன வழியில் சென்ற னர். கோயில் முகப்பு கோபுரம் அமைந்திருக்கும் பகுதி அருகே உடைமைகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் பத்மநாபத்தை பாதுகாவலர் பிடித்து தள்ளியதாகக் கூறப் படுகிறது. இதனால் பத்மநாபம் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம டைந்த பாதுகாவலரும், ஊழி யர்களும், பத்மநாபத்தைக் கடு மையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த பத்மநாபம் உடனடியாக திருமலையில் உள்ள அஸ் வின் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பத்மநாபம் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மநாபத்தின் மகன் ராம் பாதுகாவலர் மற்றும் தேவஸ்தான ஊழியர்களுக்கு எதிராக திருமலை முதலாவது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறப்புப் பாது காப்புப் படை வீரரையும், 4 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களையும்கைதுசெய் தனர். திருமலையில் நடந்த இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner