எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில், 10 சதவிகித கட்டண உயர்வு, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

* ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகள் இணைப்பதால், 47 சதவிகித அலுவலகங்கள் மூடப்படும்.

* மூத்த குடிமக்கள் ரயில் பயணக் கட்டண சலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ்களில் ஆதார் எண்ணை குறிப்பிடவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

* சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரே சீரான தேர்வு முறை கொண்டுவரப்பட உள்ளது.

* ஜாமீன் வழங்கும்போது சீமைக் கருவேலமரங்களை வெட்டவேண்டும், வனவிலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீர் நிரப்பவேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

* தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

* திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களை பிரித்து 6 முதல் 12 ஆவது வகுப்புவரி நன்னெறி பாடத் திட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் கற்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை அரசு நியமித்துள்ளது.

* முன்பதிவு பயணச்சீட்டு உறுதி செய்யப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வேறு ரயிலில் இடம் ஒதுக்கும் நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் அமுலுக்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner