எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லைமாவட்டம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர், ஆதிநாத சுந்தரம். இவர், பழவூரில் வியாபாரம் செய்துவருகிறார். பழவூர் வியாபாரி கள் நலச்சங்கத் தலைவராகவும்,  தர்ம ரக்ஷண ஸ்மிதி அமைப்பின் ராதாபுரம் வட்டார துணைச் செயலா ளராகவும் உள்ளார்.

இவர்,நெல்லைமாவட்டம்,வள் ளியூர்குற்றவியல்நடுவர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘நடிகர் கமல காசன் சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி பேட்டி யில், பெண்கள் பாதுகாப்பு தொடர் பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகா பாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துகளைத் தெரி வித்தார்.

அவரது பேட்டி, மகாபாரதத் தையேஇழிவுபடுத்தும்விதத் தில் அமைந்திருந்தது. இந்துக் களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார்.இந்துக்களின்நம் பிக்கையையும், அவர்களின் வழி பாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும்புண்படுத்திவிட்டது.இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கமலகாசன் பேசியது இதுதான்,  ‘‘மகாபாரத்தில்பெண்களைவைத்து சூதாடியதைக் கூறி அதை புத்தக மாக அச்சிட்டு புனிதநூலாக, கொண் டாடிய ஊர் தான் இது’’ என நடிகர் கமலகாசன் கூறியிருந்தார்.

இதில் என்ன தவறாகக் கூறிவிட்டார் கலைஞானி கமலகாசன்? உண்மையைச் சொன்னால் எரிச்சல் படுவானேன்?

இதேமகாபாரதம்பற்றிஇந்து ஆங்கில ஏட்டில் 29 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் கடிதம் ஒன்று வெளி யாகி இருந்தது (17.12.1988). கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.அய்.சுந்தரம் என்பவர்.

‘‘தர்மபுத்திரா(யுத்திஸ்த்ரா),வாயு புத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தை கள், அந்த பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால்  அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அது தெய் வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக்கூடாது என்று தான்பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும்சூதாடுவது,பாண் டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதை யைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத் துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மீக சக்திகளின் சின்னம்;எனவே,5பேரைமணந்து கொண்டார்என்றுகூறினால், அவர்கள்திருப்திஅடைந்துவிடு வார்களா? அல்லது கட்டிய மனை வியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் ‘புருஷலட்சணம்‘ என்று அவர் களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தை கள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்குமுன் நடந் ததை இப்போது அவர்களிடம் விவரித்து குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந் தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே (Adults Only) பார்க்கக்கூடியதாகும். எனவே, நள் ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.’’

என்பதுதான் அந்தக் கடிதம்.

இதற்குப் பதில் என்ன?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner