எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மார்ச் 24- தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் இந்தாண்டு நீட் தேர்வு நடத்தப்படும்என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில்,

‘’தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மூன்று இடங்களில் நீட் தேர்வு நடைபெறும்.

இந்தியாவில் நீட் தேர்வு 103 நகரங்களில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சியில் உள்ளிட்ட 80 நகரங்களில் நீட் தேர்வு நடந்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட 23 நகரங் களில் நாமக்கல், வேலூர், நெல்லை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று டில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அமைச்சர் சந்தித்துள்ளார்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் ஜவடேகரின் நீட் தேர்வு அறிவிப்பு குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner